தீபாவளி தினத்தன்று பதுளை மாவட்டத்தின் அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும்  மூடிவிடுமாறு, பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் மதுவரி மற்றும் கலால் திணைக்கள ஆணையாளர் நாயகத்திற்கு அனுப்பியுள்ள கடிதத்திற்கமைய அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் 18.10.2017ம் திகதி மட்டும் மூடிவிட உத்தரவிடப்பட்டுள்ளது. 

மதுவரி மற்றும் கலால் திணைக்கள ஆணையாளர் நாயகம் விடுத்துள்ள சுற்றரிக்கையொன்றில் தீபாவளி தினத்தில் பதுளை மாவட்டத்தின் மதுபான விற்பனை நிலையங்கள் அனைத்தையும் மூடிவிடுவதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

பதுளை மாவட்ட தமிழ் மக்கள் விடுத்த வேண்டுகோளையடுத்தே பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ. அரவிந்தகுமார் மேற்படி கடிதத்தை அனுப்பியிருந்தமை குறிப்பிடத்தக்கது.