இலங்கை வருகிறார் பாகிஸ்தான் வெளியுறவுச் செயலர்

Published By: Priyatharshan

16 Oct, 2017 | 03:26 PM
image

பாகிஸ்தானின் வெளியுறவுச் செயலாளர் செல்வி. தெஹ்மினா ஜானுவா இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தானுக்கிடையில் இடம்பெறவுள்ள 5 ஆவது சுற்று இருதரப்பு அரசியல் கலந்தாய்வில் கலந்துக்கொள்வதற்காக எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 18 ஆம்  திகதி வரை இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். 

இதன் 4 ஆவது சுற்றுக் கலந்துரையாடல் கடந்த 2014 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இஸ்லாமாபாத்தில் இடம்பெற்றிருந்தது.

இவ் விஜயத்தின் போது சனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் வெளியுறவு அமைச்சர் திலக் மாரப்பன ஆகியோரை சந்திக்கவுள்ளார். 

பிராந்திய மற்றும் சர்வதேச அரங்குகளுடன் தொடர்புடைய பரஸ்பர நலன்மிக்க விடயங்கள் மற்றும் இருதரப்பு உறவுகள் குறித்து ஆழமான கலந்தாய்வினை அவர் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகியன அனைத்து துறைகளிலும் பரஸ்பர நம்பிக்கை மற்றும் இறையாண்மை சமத்துவத்தின் அடிப்படையில் நட்புறவுடனான சுமுகமான உறவினைப் பேணிவருகின்றன. ஏற்கனவே, நிலவும் இருதரப்பு உறவுகள் மற்றும் ஒத்துழைப்புக்களை மேலும் வலிமையாக்குவதற்கு பாகிஸ்தானிய வெளியுறவு செயலாளரின் இவ்விஜயமானது பங்களிப்புச் செய்யும்.

இதேவேளை, வெளியுறவு செயலாளரின் இலங்கை விஜயத்தின்பொழுது, இலங்கையில் பாகிஸ்தானிய முன்னாள் மாணவர் சங்கத்தினை  நிறுவவிருக்கின்றமை குறிப்பிடதக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58