விளம்பரப்படுத்தல் துறையில் தசாப்தத்தைக் காணும் Insights

Published By: Priyatharshan

16 Oct, 2017 | 02:58 PM
image

ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் மற்றும் தொடர்பாடல்கள் முகவர் நிறுவனமான Insights Advertising, ஊடகத்துறையில் படைப்பாக்கத் தீர்வுகளை வழங்குவதில் வெற்றிகரமான தொழிற்பாடுகளின் பத்தாவது ஆண்டு நிறைவை எட்டியுள்ளது. 

2007 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதத்தில் நளின், இந்து, சமிந்த மற்றும் ஷர்மன் ஆகிய நான்கு படைப்பாக்க சிந்தனைச் சிற்பிகளால் இந்நிறுவனம் ஸ்தாபிக்கப்பட்டது. சிந்தனை மேலாதிக்கம் நிறைந்த விளம்பரத்துறையில் தமது படைப்பாற்றலை விரிவுபடுத்த வேண்டும் என்ற கனவு தொலைக்காட்சி, வானொலி, பத்திரிகை மற்றும் சமூக ஊடகத்தில் மிகவும் தனித்துவம் வாய்ந்த, நீண்ட காலத்திற்கு நிலைபெற்றுள்ள மற்றும் செல்வாக்கு மிக்க செய்திகளை பகிர்ந்து கொள்வதற்கு உதவியுள்ளது.

இலங்கையில் விளம்பரத்துறையில் படைப்பாற்றல் பிதாமகர்கள் மற்றும் விற்பன்னர்கள் எனப் போற்றப்படுகின்றவர்கள் மத்தியில் நிறுவனத்தின் ஸ்தாபகர்களின் பெயர்களும் அடங்கியுள்ளன. தமது வாடிக்கையாளர்களின் வரவுச்செலவுத் திட்டத்திற்கு அமைவாக, அவர்களின் குறிக்கோளை அடையப்பெறும் வகையில் பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட விளம்பரங்களின் தனித்தன்மையும், அவர்களுடைய படைப்பாக்க கலைவண்ணங்களும் தற்காலத்திற்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றன. விளம்பரத்துறையின் ஆழமான அம்சங்களை மிகவும் புதுமையாக அவர்கள் சிந்திப்பதுடன், படைப்பாக்கத்திறனை முதன்மையாகக் கொண்ட அவர்களுடைய அணுகுமுறை, மூலோபாயம், தத்துவம் மற்றும் நிறைவேற்றும் பாணி ஆகியவற்றைப் பொறுத்தவரையில் அடிமட்டத்தையும் எட்டும் வகையில் அவை முன்னெடுக்கப்படுகின்றன.

‘மிகவும் திறன் கொண்ட மற்றும் மூலோபாயரீதியாக நன்மைபயக்கும் விளம்பரப்படுத்தல் கலவையுடன் இலக்கு வைக்கப்படும் நுகர்வோரிடமிருந்து மிகச் சிறந்த கருத்துக்களைப் பெற்றுக்கொள்ள வேண்டும்’ என்ற எளிமையான மகுட வாசகத்தை இந்த விளம்பர முகவர் நிறுவனம் கொண்டுள்ளது.

Insights Advertising நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் நிறைவேற்று படைப்பாக்கத்துறைப் பணிப்பாளருமான சமிந்த கமகே கூறுகையில், “நுகர்வு என்பது மீண்டும் மீண்டும் பலத்த விவாதத்திற்குள்ளாக்கப்படும் ஒரு தலைப்பாகக் காணப்படும் நிலையில், முடிவில் நாமெல்லாம் வெறும் விற்பனையாளர்களே. மட்டுப்படுத்தப்பட்ட வளங்களும் மட்டற்ற தேவைகளும் காணப்படும் நிலையில் விசாலமான இந்த சர்வதேச சந்தையில் எமது குடும்பத்தின் தேவைகளை ஈடுசெய்யும் மிகச் சிறந்த வர்த்தகநாமங்களை நாம் தெரிவுசெய்ய வேண்டிய தேவையுள்ளது. இதனை உறுதிப்படுத்துவதற்கு எமது வாழ்க்கைமுறை மற்றும் செலவளிக்கக்கூடிய வருவாய் ஆகியவற்றைக் கருதுகையில் இத்தெரிவை மிக ஆழமாக உற்றுநோக்கியே மேற்கொள்ள வேண்டியுள்ளது.” என்று குறிப்பிட்டார்.

Insights Advertising விளம்பர முகவர் நிறுவனம் தனது சாதனை இலக்கினைக் குறிக்கும் வகையில் இரத்தினபுரி வடக்கு கரந்தன வித்தியாலயத்தில் பாடசாலை உபகரணங்கள் அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டுள்ள நிலையில் கட்டடம் ஒன்றை நிர்மாணிப்பதன் மூலமாக ‘நூலக செயற்திட்டமொன்றுக்கு’ நிதியுதவி அளிப்பதற்கு அது திட்டமிட்டுள்ளது.

வசதிகளற்ற பாடசாலைப் பிள்ளைகளின் உபயோகத்திற்காக பெறுமதிமிக்க புத்தக்கங்கள் பலவற்றை வழங்கி உதவுவதற்கும் Insights எண்ணியுள்ளது.

இச்செயற்திட்டத்திற்கு எவ்வாறு விளம்பர முகவர் நிறுவனம் உதவ முன்வந்தது என்பது தொடர்பில் கமகே குறிப்பிடுகையில்,

 “அதிபர் வெளியிட்டுள்ள தகவல் விபரங்களுக்கு அமைவாக அண்மையில் ஏற்பட்ட பெருவெள்ளத்தால் நிகழ்ந்த அழிவுகள் காரணமாக பாடசாலை பெரும் பிரச்சினைகளுக்கு முகங்கொடுப்பதாகவும்ரூபவ் கிராம வாசிகள் மற்றும் அரசாங்கத்தின் உதவியுடன் பாடசாலையை புதிய இடமொன்றில் மீள்நிர்மாணம் செய்வதற்கும் தான் திட்டமிட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். இது தொடர்பில் அறிந்துகொண்ட நாம் பாடசாலையின் நூலகத்தை மீள்நிர்மாணிப்பதற்கு உதவுவதற்கு தீர்மானித்தோம்.” என்று கூறினார். 

நிறுவனம் தற்போது பத்தாவது ஆண்டைப் பூர்த்தி செய்துள்ள நிலையில் இதனை ஒரு வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டமாக முன்னெடுப்பதற்கு தாம் தீர்மானித்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

“ஆகவே Insights Advertising நிறுவனத்தைப் பொறுத்தவரையில் இந்த சாதனை இலக்கினை நாம் எட்டியுள்ள நிலையில், எமது மகத்தான வாடிக்கையாளர்கள் மற்றும் எமது நிறுவனம் ஆரம்பித்த காலம் முதற்கொண்டு எமது குறிக்கோள்களை அடைய எண்ணற்ற வழிகளில் எமக்கு உதவியுள்ள அனைவரையும் மேற்குறிப்பிட்ட வர்த்தக சமூகப் பொறுப்புணர்வுச் செயற்திட்டத்தில் பங்குகொள்ள முன்வருமாறு நாம் அழைப்பு விடுத்துள்ளதுடன் விளம்பர முயற்சிகளில் 1 ஆவது தசாப்தத்தை வெற்றிகரமாக கொண்டாடும் இத்தருணத்தில் சமூகத்திற்கும் நாம் உதவ விரும்புகின்றோம்.” என்று கமகே அவர்கள் குறிப்பிட்டார்.

Kotmale பாலை மூலமாகக் கொண்ட உற்பத்திகள், Magic ஐஸ்கிறீம், Kist பிஸ்கட் வகை, Kist Nectar, Kist ஜாம் வகை மற்றும் Sauce வகை, Goldi, Sam’s and Finest இறைச்சி உற்பத்திகள், Bonlac கொழுப்பற்ற பால் மா போன்ற வர்த்தகநாமங்கள் உட்பட பல்வேறு பிரபலமான உற்பத்திகளை விநியோகிக்கும் தொழிற்துறை பெரு நிறுவனங்களான Cargills மற்றும் Millers, தேசிய லொத்தர் சபை வாசனா சம்பத, NIBM மற்றும் சம்பத் வங்கிக் குழுமத்தின் முற்றுமுழுதான உரிமையாண்மையின் கீழான ஒரு துணை நிறுவனமான Siyapatha Finance போன்ற பெருமதிப்பிற்குரிய நிறுவனங்களை Insigyts Advertising தனது வாடிக்கையாளர்களாகக் கொண்டுள்ளதுடன், அந்த நிறுவனங்களுக்கு திறன்மிக்க, முற்றுமுழுதான சந்தைப்படுத்தல் தொடர்பாடல் தீர்வுகளுக்கான படைப்பாக்கங்களை உருவாக்கி வருகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தமது குழுமத்தின் புதிய இலச்சினையை வெளியிட்ட...

2024-04-10 22:13:17
news-image

கொழும்பிற்கும் பங்களாதேஷின் டாக்காவுக்கு இடையில் நேரடி...

2024-04-09 15:30:03
news-image

வெற்றிக்கு மீள்வரைவிலக்கணம் வகுத்த Certis Lanka...

2024-04-09 15:30:26
news-image

ஐந்து நட்சத்திர சொகுசு பூட்டிக் ஹோட்டலான...

2024-04-07 14:31:49
news-image

BAIC X55 II SUV வாகனங்களுக்கான...

2024-04-05 02:01:08
news-image

5 வருட காலத்தில் ஃபுட் ஸ்டூடியோ...

2024-04-05 07:00:05
news-image

பான் ஏசியா வங்கியுடன் புத்தாண்டு மாயவித்தையை...

2024-04-04 18:14:00
news-image

சம்பத் கார்ட்ஸ் “சம்பத் பாரம்பரியம்” புத்தாண்டு...

2024-04-04 10:11:20
news-image

கொழும்பு Radisson ஹோட்டலில் புதன்கிழமைகளில் Sri...

2024-04-05 10:18:57
news-image

பிரிட்டிஷ் கவுன்சில் 2024 - 25...

2024-04-01 16:11:16
news-image

USAID அமைப்புடன் இணைந்து ‘Charge while...

2024-04-01 14:23:44
news-image

சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு மாதாந்தம்...

2024-04-01 14:24:58