பாலியல் புகாரால் பறிபோகிறது ஆஸ்கார் விருது

Published By: Digital Desk 7

16 Oct, 2017 | 12:00 PM
image

கடந்த 35 ஆண்டுகளாக ஹாலிவுட்டில் படவிநியோகம் மற்றும் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஹார்வி வெய்ன்ஸ்டீன் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகைகள், பெண் உதவியாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கடந்த வாரம்  பிரபல நாளிதழ் ஒன்று ஆதாரங்களுடன் விரிவான செய்தி ஒன்றை வெளியிட்டது.

1998 ஆம் ஆண்டு வெளியாகி சிறந்த படம் உட்பட ஏழு ஆஸ்கர் விருதுகளை வென்ற படம் ‘ஷேக்ஸ்பியர் இன் லவ்’. இந்தப் படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரே 65 வயது நிரம்பிய ஹார்வி வெய்ன்ஸ்டீன். 

இச் செய்தி தந்த உந்துதலை அடுத்து ஹாலிவுட்டின் முன்னணி நடிகைகள் தாமாகவே முன்வந்து ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீது அடுக்கடுக்கான பாலியல் புகார்களை கூறி வருகிறார்கள்.

ஹாலிவுட்டில் மிக அதிக சம்பளம் பெரும் நடிகையும், இயக்குநருமான ஏஞ்சலினா ஜோலி மற்றும் கைனத் பால்ட்ரோ, காரா டெலவிங் உட்பட பல முன்னணி நடிகைகளும் துணை நடிகைகளும் புகார் கூறி வருகின்றனர்.

இச் செய்தி கசிவின் பின்னர்  ஹார்வி வெய்ன்ஸ்டீனின் மனைவி அவரைவிட்டுப் பிரிந்து சென்றுள்ளார். கடந்த அமெரிக்க அதிபர் தேர்தலின்போது பரப்புரைக்காக ஹார்வி வெய்ன்ஸ்டீனிடமிருந்து பெற்ற நன்கொடையை திரும்பி அளிக்கப்போவதாக ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராகப் போட்டியிட்ட ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.

ஆஸ்கர் விருதுக் குழு ஹார்வி வெய்ன்ஸ்டீனுக்கு வழங்கிய ஆஸ்கர் விருதை திரும்ப ஒப்படைக்கக் கோரும் என்று செய்திகள் வெளியாகி வருகின்றன. மேலும் பிரிட்டீஷ் திரைப்பட அகாடமியான ‘பாப்டா’ உறுப்பினர் பதவியிலிருந்து ஹார்வி வெய்ன்ஸ்டீனை நீக்கி இருக்கிறது.

நிலைமை கைமீறிச் சென்றதை அடுத்து ஹார்வி வெய்ன்ஸ்டீன் தனது கடந்த கால அழுக்கான வாழ்க்கைக்காக மன்னிப்பு கோரியுள்ளார்.

ஹார்வி வெய்ன்ஸ்டீன் மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்க அமெரிக்க புலனாய்வு அமைப்பு விசாரணைக் குழுவொன்றை  நியமித்துள்ளது. 

ஹார்வி மீது வழக்குத் தொடுக்கப்பட்டு குற்றம் நிரூபிக்கப்பட்டால் 25 ஆண்டுகள் சிறை தண்டனை கிடைக்க வாய்ப்பிருப்பதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈரானின் அணுஉலைகளிற்கு பாதிப்பில்லை - ஐநா...

2024-04-19 12:04:21
news-image

இஸ்ரேல் தாக்குதல் மேற்கொண்ட நகரத்தில் அணுஉலை...

2024-04-19 11:47:29
news-image

இந்தியாவின் 18 ஆவது பாராளுமன்ற தேர்தல்...

2024-04-19 11:45:04
news-image

இஸ்ரேல் தாக்குதலை மேற்கொண்ட நகரமே ஈரானின்...

2024-04-19 11:01:21
news-image

பாதுகாப்பு நிலவரம் மோசமடையலாம் - இஸ்ரேலில்...

2024-04-19 10:38:00
news-image

ஈரான் மீது இஸ்ரேல் தாக்குதல் -...

2024-04-19 10:28:27
news-image

ஈரான் மீது இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்

2024-04-19 09:31:45
news-image

2024ம் ஆண்டுக்கான 100 செல்வாக்கு மனிதர்களில்...

2024-04-18 15:14:29
news-image

சிட்னி வணிகவளாக தாக்குதலில்துணிச்சலாக செயற்பட்டவருக்கு அவுஸ்திரேலியாவின்...

2024-04-18 17:05:27
news-image

என்மீது தாக்குதல் மேற்கொண்டவரை மன்னித்துவிட்டேன் -...

2024-04-18 11:24:08
news-image

புனித உம்ரா, சுற்றுலா மன்றத்தை ஏப்ரல்...

2024-04-18 17:16:17
news-image

இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது...

2024-04-18 10:58:52