பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் இன்று பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

ஹம்பாந்தோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று இவர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போதே இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

மத்தல விமான நிலையத்தை இந்தியாவுக்கு குத்தகைக்கு வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நீதிமன்றத் தடை உத்தரவை மீறி ஆர்ப்பாட்டம் நடத்தியமைக்காக  நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.