கனடாவில் கடந்த ஓராண்டில் மட்டும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட கனேடியர்கள் கருணைக்கொலை செய்யப்பட்டுள்ளதாக ஒரு அறிக்கை தெரிவிக்கின்றது.   

கருணைக்கொலை செய்யப்பட்ட அனைவரும் வைத்தியர்களின் உதவியுடன் சட்டபூர்வமாக தங்களது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளதாக அவ் அறிக்கை மேலும் தெரிவிக்கின்றது.

குறித்த  விடயம் தொடர்பாக கனேடிய சுகாதார நிறுவனம் தெரிவிக்கையில்,

பெரும்பாலும் புற்றுநோயால் அவதிப்பட்டு வருபவர்களே இவ்வாறு உயிரிழப்பதாகவும்,  வைத்தியர்களின் உதவியுடன் உயிரை மாய்த்துக் கொள்ளும் நடவடிக்கை கடந்த 2016ஆம் ஆண்டு கனடாவில் சட்டபூர்வமாக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.