பாஷையூர் புனித அந்­தோ­னியார் மாண­விகள் பளு­தூக்கல் போட்­டியில் பாரிய முன்­னேற்றம்

Published By: Robert

16 Oct, 2017 | 10:04 AM
image

கல்வி அமைச்சும் கல்வி அமைச்சின் சுகா­தாரம், உடற்­கல்வி மற்றும் விளை­யாட்­டுத்­துறைப் பிரிவும் இணைந்து நடத்­திய 33ஆவது அகில இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்டு விழாவின் பளு­தூக்கும் போட்டி­களில் பாஷையூர் புனித அந்­தோ­னியார் அர­சினர் தமிழ் பாட­சாலை பெண்கள் பிரிவில் 2 தங்கம், ஒரு வெள்ளி, 4 வெண்­கலப் பதக்­கங்ளை வென்று சாதித்­துள்­ளது.

புனித அந்­தோ­னியார் மாண­விகள் போதிய வச­திகள் இல்­லா­ம­லேயே இந்த வெற்­றி­களை ஈட்­டி­யதன் மூலம் வச­தி­களும் வளங்­களும் நிறைந்த பிர­பல பாட­சா­லை­களைப் பிர­மிக்க வைத்­த­துடன் பெண்­க­ளுக்­கான பளு­தூக்கல் போட்­டி­களில் பாரிய முன்னேற்­றத்தை வெளிப்­ப­டுத்­தி­யுள்­ளது.

விளை­யாட்­டுத்­துறை அமைச்சின் உள்­ளக அரங்கில் அண்­மையில் நடை­பெற்ற 17 வய­துக்­குட்­பட்ட பெண்கள் பிரிவில் 13 புள்­ளி­க­ளுடன் சம்­பி­ய­னான இப் பாட­சாலை, ஒட்­டு­மொத்த நிலையில் 17 புள்­ளி­க­ளுடன் பொலன்­ன­றுவை றோயல் மத்­திய கல்­லூ­ரி­யுடன் இணை சம்­பி­ய­னா­னது.

17 வய­துக்­குட்­பட்ட பிரிவில் 2 தங்கம், 3 வெண்­கலப் பதக்­கங்­களை வென்ற பாஷையூர் புனித அந்­தோ­னியார் அர­சினர் தமிழ் பாட­சாலை, 20 வய­துக்­குட்­பட்ட பிரிவில் ஒரு வெள்ளிப் பதக்­கத்­தையும் ஒரு வெண்­கலப் பதக்­கத்­தையும் வென்­றது.

பழைய இரும்புக் கம்­பி­க­ளையும் படி­க­ளையும் கொண்டு விஜ­ய­பாஸ்கர் என்­ப­வ­ரிடம் பயிற்சி பெற்ற குறு­கிய காலத்தில் அகில இலங்கை பாட­சா­லைகள் விளை­யாட்டு விழா பளு­தூக்­கலில் கடந்த வருடம் முதல் தட­வை­யாக பளு­தூக்கல் போட்­டி­களில் பங்­கு­பற்றி ஒட்­டு­மொத்த நிலையில் இரண்டாம் இடத்தைப் பெற்ற புனித அந்­தோ­னியார் அர­சினர் தமிழ் பாட­சாலை இம்­முறை பெரு முன்­னேற்­றத்­துடன் சம்பியன் பட்டம் ஒன்­றுடன் இணைச் சம்­பியன் பட்­டத்­தையும் வென்­றது.

இப் பாட­சா­லைக்கு கடந்த வருடம் 2 தங்கப் பதக்­கங்­களும் 5 வெள்ளிப் பதக்­கங்­களும் கிடைத்­தி­ருந்­தன.

பாட­சாலை முடிந்த பின்னர் இப் பிள்ளைகள் பஸ் வண்­டிகள் அல்­லது துவிச்­சக்­கர வண்­டிகள் மூலம் 5 முதல் 8 கிலோ மீற்­றர்­கள்­வரை பய­ணித்து பயிற்­சி­களில் ஈடு­பட்டே இந்த வெற்­றி­களை ஈட்டி வரு­கின்­றனர். 

உடற்­ப­யிற்­சி­யகம், ஸ்குவாட்டிங் வச­திகள் உட்­பட பளு­தூக்கல் போட்­டிக்­கான உப­க­ர­ணங்கள் தங்­க­ளது பாட­சா­லைக்கு வழங்­கப்­பட்டால் இன்னும் சிறந்த பெறு­பே­று­களை ஈட்ட முடியும் என பாட­சாலை சமூ­கத்­தினர் நம்­பு­கின்­றனர்.

17 வய­துக்­குட்­பட்ட பெண்கள் 75க்கு மேல் எடைப் பிரிவு

ஜே. சுகன்யா (ஸ்னெச் 55 கி., ஜேர்க் 60 கி. மொத்தம் 115 கி.கி.) - தங்கம்.

53 கி.கி. எடைப் பிரிவு

ஏ. ஆன் பியூலா (ஸ்னெச் 40 கி. ஜேர்க் 50 கி. மொத்தம் 90 கி.கி.) - தங்கம்.

எஸ். டியானி (ஸ்னெச் 35 கி. ஜேர்க் 46 கி. மொத்தம் 81 கி.கி.) - வெண்­கலம்.

58 கி.கி. எடைப் பிரிவு

ஏ. கிரி­ஷாந்­தினி (ஸ்னெச் 35 கி. ஜேர்க் 43 கி. மொத்தம் 78 கி.கி.) - வெண்கலம்

20 வயதுக்குட்பட்ட பெண்கள்

58 கி.கி. எடைப் பிரிவு

பி. மேரி ரதீனா (ஸ்னெச் 45 கி., ஜேர்க் 58 கி. மொத்தம் 103 கி.கி.) - வெள்ளி

ஜே. மேரி லக்ஷிகா (ஸ்னெச் 40 கி. ஜேர்க் 54 கி. மொத்தம் 94 கி.கி.) - வெண்கலம்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சென்னை சுப்பர் கிங்ஸை வீழ்த்தியது லக்னோவ்...

2024-04-19 23:59:54
news-image

இலங்கையின் முதலாவது ஆசிய தங்கப் பதக்க...

2024-04-20 09:31:54
news-image

உலகத் தொடர் ஓட்டத்துக்கான இலங்கை அணி...

2024-04-19 15:45:07
news-image

ஐக்கிய அரபு இராச்சிய க்ரோன் ப்றீயில் ...

2024-04-19 15:38:26
news-image

எட்டியாந்தோட்டை புனித மரியாள் பழைய மாணவர்களின்...

2024-04-19 09:45:10
news-image

ஷஷாங்க், அஷுட்டோஷ் அதிரடியால் திகிலடைந்த மும்பை...

2024-04-19 06:04:02
news-image

ஒலிம்பிக்கிலிருந்து அவுஸ்திரேலிய குத்துச்சண்டை பயிற்றுநர் வாபஸ்

2024-04-18 16:16:23
news-image

ஒலிம்பிக் வாய்ப்புக்கான உலகக்கிண்ண பளுதூக்கல் போட்டியில்...

2024-04-18 14:49:11
news-image

வுல்வார்டின் சதத்தை சமரியின் சதம் விஞ்சியதன்...

2024-04-18 10:16:00
news-image

22 வயதுக்குட்பட்ட ஆசிய குத்துச்சண்டையில் இலங்கையின்...

2024-04-18 00:00:57
news-image

குஜராத்தை குறைந்த எண்ணிக்கைக்கு சுருட்டி வெற்றிபெற்ற...

2024-04-17 23:52:38
news-image

ஆண்களுக்கான மெய்வல்லுநர் போட்டிகளில் மிகக் பழைமையான...

2024-04-17 17:42:41