எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்கு சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Image result for மண்சரிவு அபாய எச்சரிக்கை virakesari

இதற்கமைய இரத்தினபுரி , காலி , மாத்தறை , நுவரெலியா மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கு இந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது,

மண்­ச­ரிவு அபாய எச்­ச­ரிக்கை  விடுக்­கப்­பட்­டுள்ள பிர­தேச மக்கள் எச்­ச­ரிக்­கை­யுடன் இருக்க வேண்டும் எனவும் தேவையேற்படின் பாதுகாப்பான இடங்களுக்கு இடம்பெயருமாறும் தேசிய கட்டிட ஆராய்ச்சி மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலை யம் அறிவுறுத்தியுள்ளது.

மேலும் வங்­காள விரி­கு­டாவின் தாழ­முக்கம் கார­ண­மாக வடக்கு, கிழக்கு மற்றும் தென் கடல் பிர­தே­சங்­களில் மணிக்கு 50 தொடக்கம் 60 கிலோ மீற் றர் வரை  காற்றின் வேகம் காணப்­ப டும். இந்த நிலைமை  எதிர்வரும் 5 நாட்­க­ளுக்கு தொடரும். எனவே இந்த பகுதி மீன­வர்கள் கட­லுக்கு செல்ல வேண்டாம் என்று எச்­ச­ரிக்கை விடுக்­கப்­பட்­டுள்­ளது.