''இலங்கையின் இறுதி அரசன் கூட ஒரு தமிழ்மகன்" லக்ஸ்மன் கிரிகெல்ல

15 Oct, 2017 | 01:51 PM
image

இந்த நாட்டில் வாழும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் இந்தியாவில் இருந்து வந்தவர்கள். கௌதம புத்தரும் இந்தியாவில் இருந்துதான் வந்தார். இலங்கையின் இறுதி அரசன் கூட ஒரு தமிழ்மகன், இதுதான் வரலாறு நாங்கள் தேவையற்ற சண்டைகளில் ஈடுபடவேண்டிய அவசியமே இல்லை என பாராளுமன்ற முதல்வரும் உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சருமான லக்ஸ்மன் கிரிகெல்ல தெரிவித்தார்.

மட்டக்களப்பு மண்டூர் குறுமண்வெளி பாலத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு  நடைபெற்றது. இந் நிகழ்வில் பிரதம  அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந் நிகழ்வில் பிரதம அதிதியாக  இலங்கை பாராளுமன்ற முதல்வரும் உயர்கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் லக்ஸ்மன் கிரிகெல்ல  சிறப்பு அதிதிகளாக கிராமிய பொருளாதாரம் தொடர்பான பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீரலி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் அலி சாஹீர் மௌலானா பட்டிருப்பு தொகுதி அமைப்பாளர் சோ.கணேசமூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

கிழக்கு மாகாண மக்களுக்கு நான் நன்றி கூற கடமைப்பட்டிருக்கின்றேன். காரணம் கடந்த ஜனாதிபதி தேர்தலிலேயே அதிகூடிய வாக்குகளை மைத்திரிபால சிறிசேனவிற்கு வழங்கி வெற்றிபெற வைத்திருந்தீர்கள். இதற்காக எனது மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். உங்களது ஆதரவு கிடைக்காமல் இருந்திருந்தால் இன்று இவ்வாறானதோர் நல்லாட்சி அரசாங்கம் மலர்ந்திருக்க முடியாது என்பதனை நான் கூறிவைக்க விரும்புகின்றேன். 

பலவருடங்களாக நாங்கள் பலதுன்பங்களை சந்தித்து இருந்தோம் தேவையற்ற யுத்தத்தினால். கடந்த காலங்களில் ஆட்சி செய்த அரசாங்கங்கள் பல பிழைகளை செய்துள்ளனர் என்பதனை நாங்கள் உணர்கின்றோம். தற்பொழுது நல்லாட்சி அரசில் இருக்கின்ற இந்த ஐக்கிய தேசிய கட்சியானது கடந்தகால அரசாங்கம் விட்ட பிழைகளை உணர்ந்து மக்களுக்கு சேவை செய்யவதையே விரும்புகின்றோம். ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தின் கொள்கையின் அடிப்படையில் இந்த நாட்டு மக்கள் அனைவரும் ஒரே மாதிரியானவர்கள் அவர்கள் அனைவரும் கௌரவிக்கப்படவேண்டியவர்கள் என்பதனை கூறிவைக்க விரும்புகின்றேன். 

இந்த நாட்டில் வாழும் சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் அனைவரும் இந்தியாவில் இருந்துதான் வந்திருக்கின்றனர். கௌதம புத்தரும் இந்தியாவில் இருந்துதான் வந்தார். இலங்கையின் இறுதி அரசன் கூட ஒரு தமிழ்மகன் எங்களது வரலாற்றினை நாங்கள் பார்க்கபோனோமாக இருந்தால் நாங்கள் தேவையற்ற சண்டைகளில் ஈடுபட வேண்டிய அவசியமே இல்லை. துரதிஷ்டவசமாக வரலாறு மறக்கப்பட்டு பாடசாலைகளில் கூட போதிக்க முடியாததொரு நிலையை நாங்கள் காண்கின்றோம். 

சில மக்களுக்கு 1975 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரமும் 1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரமும் தான் தெரியும். சில மக்களுக்கு 1956 ஆம் ஆண்டு கலவரம் மாத்திரம்தான் தெரியும். இவ்வாறான வரலாறுகளை மாத்திரம்தான் தெரியும். ஆனால் ஆயிரம் ஆயிரம் காலம் இந்த நாட்டில் இருந்த வரலாறுகளை தெரிந்து கொள்வதற்கு நாங்கள் மறுக்கின்றோம்.

இலங்கையில் கண்டியை ஆட்சி செய்த சிங்கள ஆட்சியாளர்கள்  வடக்கிலும் கிழக்கிலும் மணமகளை பெற்றார்கள் என்ற வரலாறும் இருக்கின்றது. இதுதான் இலங்கையின் உண்மையான வரலாறு. இது சுவடிகளிலும் உள்ளது. எனவே ஐக்கிய தேசிய கட்சி இதனை நன்றாக புரிந்திருக்கின்றது. புதிய அரசாங்கம் 2015ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட பிற்பாடு இலங்கையில் வாழ்கின்ற அனைத்து மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்குரிய வழிவகைகளை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்.

கொழும்பில் இருந்து ஆட்சிசெய்த பல கட்சிகள் பல பிழைகளை செய்திருக்கின்றார்கள். கடந்த காலங்களில்  சிறிமாவோ பண்டாரநாயக்கா 1976 ஆம் ஆண்டு காலத்திலும் ஜே.ஆர்.ஜேவர்த்தனவினாலும் அரசியலமைப்புக்கள் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த அரசியலமைப்புக்கள் நடைபெறுகின்ற நேரத்திலே தமிழ் மக்களுடைய அபிலாசைகளை கருத்தில் எடுக்காமல் அதனை சேர்க்காமல் அந்த அரசியலமைப்புக்களை உருவாக்கியிருந்தார்கள். 

ஆனால் இந்த புதிய அரசாங்கமானது அரசியலமைப்பை உருவாக்குவதற்காக பல குழுக்களை அமைந்து அனைவரினது கருத்துக்களையும் உள்வாங்கி நல்லதொரு அரசியலமைப்பை உருவாக்குவதற்குரிய வேலைகளை மேற்கொண்டு வருகின்றது. முதன்முறையாக எல்லா ஜனநாயகட்சிகளினதும், அனைத்து மக்களினதும், அனைத்து சிவில் சமூகங்களினதும் கருத்துக்களைப்பெற்று இந்த அரசியலமைப்பை உருவாக்க முயல்கின்றோம். இதன் அடிப்படையில் தமிழத் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இதுவரை 80க்கும் மேற்பட்ட அமர்வுகளிலே பங்கெடுத்து இருக்கின்றார். எனவே அவர்களின் கருத்துகளை உள்வாங்கித்தான் இந்த அரசியலமைப்பினை உருவாக்கி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருக்கின்றோம். இதன் அடிப்படையில் மக்களாகிய உங்களின் ஆதரவையும் இதற்காக நாடவுள்ளோம். 

இந்த நாட்டில் பொருளாதார ரீதியான யுகத்தை கட்டியெழுப்ப இருக்கின்றோம். கடந்த அரசாங்க காலத்திலே சர்வதேச ரீதியில் ஒதுக்கப்பட்ட ஒரு சூழ்நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டிருந்தோம். எனவே புதிதாக உருவாக்கப்பட்ட இந்த நல்லாட்சி மூலம் சர்வதேச உலகத்தால் நல்லாட்சி அரசு நகரிகமான அரசு என்ற நற்பெயருடன் அவர்களின் உதவியினைப்பெற்று நாங்கள் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப இருக்கின்றோம். வெளிநாடுகளில் இருந்து மூலதனங்களை மேற்கொள்வதற்காக இங்கு பலர் வருகின்றனர்.

கிழக்கு மாகாணத்திலே 300 அறைகளைக் கொண்ட 38 ஹேட்டல்கள் அமைத்து பத்தாயிரத்திற்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்க ஏற்பாடு செய்துள்ளோம். இது ஒரு ஆரம்பம்தான் அடுத்த மாதம் இந்தியாவின் பெருந்தெருக்கள் அமைச்சர் எங்களைவந்து சந்திக்க இருக்கின்றார். அவர்கள்  வடக்கு கிழக்கில் உள்ள பெருந்தெருக்களை அமைத்து தருவதற்கு எண்ணியுள்ளனர். இதன் அடிப்படையில்  இந்திய உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு எங்களது முன்மொழிவுகளை ஒப்படைத்துள்ளோம். இந்த அடிப்படையில் கொழும்பில் இருந்து மட்டக்களப்பு வரையான அதிவோக நெடுஞ்சாலை ஒன்றை அமைப்பதென அம்முன்மொழிவில் உள்ளடக்கப்பட்டுள்ளது. அது மாத்திரமின்றி வடக்கில் யாழ்ப்பாணம் மன்னார் பாதை, வவுனியா திருகோணமலை பாதை என்பனவற்றையும் அமைப்பதற்கு எண்ணியுள்ளோம். அது மாத்திரமின்றி மட்டக்களப்பு இருந்து திருகோணமலை திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான கரையோரமான புகையிரத பாதையையும் அமைக்க எண்ணியுள்ளளோம். 

ஏன் அவர்கள் எமக்கு உதவியினை மேற்கொள்கின்றார்கள் என்றால் இந்த அரசாங்கம் மக்களின் பிரச்சினைகளை உணர்ந்து தீர்ப்பதற்கான முயற்சிகளை இதய சுத்தியுடன் மேற்கொண்டு வருகின்றது என்பதனை அவர்கள் உணர்ந்ததால்தான் இதனை அவர்கள் மேற்கொள்கின்றனர். எனவே இலங்கையில் வாழும் அனைத்து மக்களும் ஏதோ ஒரு விதத்தில் பாதிக்கப்பட்டிருக்கின்றனர். இதனை உணர்ந்து அனைவரும் அனைத்தையும் மறந்து சகோதரர்போல் முதாதையார் காட்டிய வழியில் நாங்கள் இந்த நாட்டில் ஒற்றுமையாக வாழவேண்டும். இதுவே இந்த நல்லாட்சியின் நோக்கமாகும் என அவர் இதன்போது தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-18 14:17:05
news-image

லொறி - கெப் மோதி விபத்து...

2024-04-18 13:30:31
news-image

குறைவடைந்த தங்கத்தின் விலை!

2024-04-18 13:47:45
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-18 12:44:55
news-image

யாழ். பல்கலைக்கழக பொன்விழா ஆண்டில் முதலாவது...

2024-04-18 13:20:49
news-image

கைதிக்குச் சூட்சுமமான முறையில் போதைப்பொருள் கொண்டு...

2024-04-18 13:26:03
news-image

சுற்றுச் சூழல் பாதிப்புக்களை தெரிவிக்க தொலைபேசி...

2024-04-18 13:32:52
news-image

உக்ரைன் போருக்கு இலங்கையர்களை அனுப்பிய ஓய்வு...

2024-04-18 12:23:02
news-image

தேர்தல்களை பிற்போடுவதை கடுமையாக எதிர்ப்போம் -...

2024-04-18 11:52:31
news-image

கடலில் குழந்தை பிரசவித்த நயினாதீவு பெண்

2024-04-18 11:40:05
news-image

மைத்திரிபால சிறிசேனவிற்கு தடை உத்தரவு நீடிப்பு!

2024-04-18 12:12:09
news-image

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப்...

2024-04-18 11:56:42