மஸ்கெலியா - குடா மஸ்கெலியா பிரதேசத்தில் மண்சரிவு அபாயம் காரணமாக ஒரு குடியிருப்பைச் சேர்ந்த 5 பேரை வேறு இடங்களுக்கு இடம்பெயருமாறு இன்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

குடா மஸ்கெலியா பகுதியில் குறித்த வீட்டிற்கு அருகில் ஹட்டன் மஸ்கெலியா பிரதான வீதியில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதனால், வீட்டிற்கு அருகில் அமைக்கப்பட்டிருந்த மதிலும் சேதமாகியுள்ளது.

இதன் காரணமாக குடியிருப்பில் தங்கியிருந்தவர்களை பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு செல்லுமாறு கிராம சேவகரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா மவுசாகலை பகுதியில் பெய்துவரும் தொடர்ச்சியான மழை காரணமாக, அதனை அண்டிய பகுதிகளில் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தேசிய கட்டிட ஆய்வு மையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.