உள்ளூராட்சிமன்றத் தேர்தலை ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கான தீர் மானத்தை ஜனாதிபதி மற்றும் பிரதமர் எடுத்துள்ளதாக அரசாங்கத்தின் முக் கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார். 

இதனடிப்படையில் இந்த வாரத் தில் மாநகர, நகர, பிரதேசசபை திருத் தச்சட்ட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட உள்ளது. இந்நிலை யில் சுயாதீன தேர்தல்கள் ஆணைக் குழு வெள்ளிக்கிழமைக்கு முன்பதாக வேட்புமனுவுக்கான திகதியை அறி விக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.   

ஜனவரியில் உத்தேசிக்கப்பட்டுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தலை எதிர் கொள்வதற்கு ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன 

தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி , பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சியினர் தனித்தனியே கூட்டணி அமைத்து தேர்தலில் களமிறங்குவது குறித்து தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.   

அந்தவகையில் மலையகம் , வடக்கு மற்றும் கிழக்கு உள்ளிட்ட பகுதிகளில் தமிழ் மற்றும் முஸ்லிம் ஆதரவைப் பெற்றுக் கொள்வதற்கு பிரதான கட்சிகள் வியூகம் வகுத்து வருகின்றது. குறிப்பாக தமக்கு ஆதரவு வழங்கக் கூடிய தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் கூட்டணியமைக்கும் முயற்சிகள் மும்முரமாக ஆரம்பிக்கப்பட்டுள்ளது.   

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி கீழ் மட்டத்திலிருந்து மறுசீரமைப்புப் பணிகளை முன்னெடுத்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுடன் இணைந்து கூட்டு எதிர் கட்சியில் செயற்படும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி உறுப்பினர்களின் தொகுதி அமைப்பாளர் பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டு நம்பிக்கைக் குரியவர்கள் மீள்நியமிக்கப்பட்டுள்ளனர்.   

சுதந்திர கட்சியின் கோட்டை எனக் கருதக் கூடிய அத்தனகல்ல தேர்தல் தொகுதியை முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரணதுங்கவுக்கு மீண்டும் வழங்கப்பட்டுள்ளமை முக்கியமான விடயமாக கருதப்படுகின்றது. அதே போன்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு ஊடாக ஆதரவு அளித்து வந்த அனைத்து அரசியல் கட்சிகளுடனும் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.   

மறு புறம் ஐக்கிய தேசியக் கட்சி எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தலில் யானை சின்னத்தில் கூட்டணி அமைத்து போட்டியிடுவதற்காக குறித்த தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகளுடன் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்துள்ளது. ஆனால் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சியின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கும் இடையில் இடம்பெறக் கூடிய கடின போட்டியில் கூடிய வாக்குகள் மூலம் ஐக்கிய தேசியக் கட்சி உள்ளூராட்சிமன்ற தேர்தலில் கூடுதலான தொகுகளில் வெற்றி பெற வாய்ப்புகள் உள்ளன.   

ஏனெனில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாக வாழும் மலையகம் , வடக்கு மற்றும் கிழக்கில் ஐக்கிய தேசியக் கட்சி ஏற்கனவே உள்ளூராட்சிமன்றத் தேர்தலை வெற்றிகரமாக எதிர்கொள்வதற்கான கட்டமைப்பை உருவாக்கியுள்ளது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சுதந்திர கட்சிக்கோ அல்லது மஹிந்த அணிக்கோ தம்மை விட அதிக வாக்குகள் சென்று விடக் கூடாது என்பதில் ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவம் மிகவும் அவதானத்துடன் செயற்பட்டு வருகின்றது.   

ஆனால் தனக்குள்ள மக்கள் ஆதரவை உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் முழுமையாக பெற்று அரசாங்கத்துக்கு பதிலடி கொடுக்க வேண்டும் என்ற கடினமான நிலைப்பாட்டுடன் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கூட்டு எதிர்க் கட்சியினர் செயற்பட்டு வருகின்றனர். முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ வடக்குக்கு சென்றதும் மஹிந்த ராஜபக்ஷ கிழக்குக்கு சென்றதும் இழந்த சிறுபான்மை மக்களின் ஆதரவுகளை பெற்றுக்கொள்ளும் நோக்கத்திலேயேயாகும்.   

குறிப்பாக கிழக்கில் புதிய கூட்டணிகளை உருவாக்கி அதனூடாக மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் மஹிந்த தரப்பால் முன்னெடுக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் உள்ளூராட்சிமன்ற தேர்தல் மாத்திரம் அல்ல ஏனைய அனைத்து தேர்தலிலும் இந்த ஆதரவை தக்கவைத்து கொள்ளும் ஒரு கீழ்மட்ட கட்டமைப்பை கூட்டு எதிர்க் கட்சியினர் உருவாக்கியுள்ளனர்.  

அதே போன்று பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் தனித்தும் குறிப்பிட்ட சில பகுதிகளில் பிரதான கட்சிகளுடன் கூட்டணி அமைத்தும் போட்டியிட திட்டமிட்டுள்ளன. வடக்குக்கு சென்று அடுத்த கட்ட அரசியல் செற்பாடுகளுக்கான தயார்ப்படுத்தல்களை மேற்கொள்வதற்காக பசில் ராஜபக்ஷ அண்மையில் யாழ்ப்பாணத்துக்கு சென்றிருந்தார். அந்த முயற்சிகள் அனைத்தையும் தோல்வியடையும் செய்யும் வகையில் நேற்று சனிக்கிழமை யாழ். சென்றிருந்த ஜனாதிபதி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்களை சந்தித்து பேசியிருந்தார்.   

அடுத்த தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளின் முக்கியத்துவம் தொடர்பில் பிரதான கட்சிகளின் அக்கறையினையே இவ்வாறான விஜயங்கள் வெளிப்படுத்துகின்றன. எவ்வாறாயினும் நல்லாட்சி அரசாங்கத்தின் முதலாலது தேர்தல் சவாலாக உள்ளூராட்சிமன்றத் தேர்தல் அமையப் போகின்றது. பிரதான கட்சிகள் பங்காளிகளுடன் கூட்டணியமைத்து ஒரு முக்கோண சமரை நோக்கி உள்ளூராட்சிமன்றத் தேர்தல் நகர்த்தப்பட்டுள்ளது.