கிளிநொச்சிக்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினர்கள் பிரத்தியேகமாகச் சந்தித்தனர்.

காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் ஜனாதிபதியைச் சந்திக்க வேண்டும் எனக்  கோரிக்கை விடுத்ததை ஏற்றுக்கொண்ட ஜனாதிபதி, கிளிநொச்சியிலிருந்து கொழும்புக்கு  வாகன ஏற்பாடு செய்வதாகவும், எனவே அங்கு வந்து சந்திக்குமாறும் கூறினார்.

இதையடுத்து, காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள் தங்களின் கோரிக்கைகள் அடங்கிய மகஜர் ஒன்றை ஜனாதிபதியிடம் கையளித்தனா்.

இதன்போது காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்கள்  ஜனாதிபதியிடம் தங்களின் பிள்ளைகள் இரகசிய முகாம்களில் இன்னும் இருப்பதாக குறிப்பிட்டனா். 

அதற்கு பதிலளித்த ஜனாதிபதி, அவர்களுக்கு சிறப்பு வாகன ஏற்பாடும் பொலீஸ் பாதுகாப்பும் வழங்குவதாகவும், இரகசிய முகாம்கள் எங்கு இருக்கின்றனவோ அங்கு அவர்கள் சென்று நிலைமையைப் பார்த்துவரலாம் என்றும் கூறினார்.