ஐந்து வருடங்களாக தலிபான்கள் பிடியில் பணயக் கைதிகளாக வைக்கப்பட்டிருந்து விடுவிக்கப்பட்ட கனேடிய-அமெரிக்க தம்பதியர் கனடா சென்று சேர்ந்தனர். தமது பணயக் காலத்தில் இடம்பெற்ற சோகச் சம்பவங்களையும் அவர்கள் விவரித்துள்ளனர்.

ஜோஷுவா பொய்லே மற்றும் அவரது மனைவி கெய்ட்லன் கோல்மன் ஆகிய இருவரும், தமது மூன்று குழந்தைகளுடன் ஐந்து வருடங்களுக்கு முன் குறுகிய பயணம் ஒன்றை மேற்கொண்டு ஆப்கானிஸ்தான் சென்றிருந்தனர். அங்கு, தலிபான்கள் கட்டுப்பாட்டில் இருந்த குக்கிராமங்களில் வசித்துவரும் மக்களுக்கு தம்மாலான உதவிகளைச் செய்து கொடுத்து வந்தனர்.

அப்போது ஒருநாள், தலிபான்களின் வலையமைப்பில் உள்ள கடும்போக்கு இயக்கமான ஹக்கானி குழுவினர், ஜோஷுவா குடும்பத்தினரைப் பணயக் கைதிகளாகப் பிடித்துச் சென்றனர்.

அப்போது கர்ப்பிணியாக இருந்த கெய்ட்லன் பிரசவித்த பெண் குழந்தையை அவர்கள் ஈவு இரக்கமின்றிக் கொலை செய்துள்ளனர்.

மேலும், ஹக்கானி குழுவின் தலைவரின் உதவியுடன் காவலர் ஒருவர் கெய்ட்லனை வல்லுறவுக்கும் உட்படுத்தியுள்ளார்.

பாகிஸ்தானிய இராணுவத்தின் தலையீட்டையடுத்து இத்தம்பதியினர் அவர்களது குழந்தைகள் சகிதம் விடுவிக்கப்பட்டு கனடாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.