மோசமான கணக்காய்வு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முயற்சி

Published By: Priyatharshan

14 Oct, 2017 | 12:33 PM
image

தேசிய கணக்­காய்வு சட்­ட­மூலம் திரி­பு­ப­டுத்­தப்­பட்டு திரு­டர்கள்  தப்­பிக்கும் வகையில் நிறை­வேற்­றவே அர­சாங்கம் முயற்­சிக்­கின்­றது. மோச­டி­யான கணக்­காய்வு சட்­ட­மூ­லத்தை  பாராளு­மன்­றத்தில் நிறை­வேற்ற அனு­ம­திக்­கப் ­போ­வ­தில்லை என மக்கள் விடு­தலை முன்­னணி தெரி­வித்­தது. 

இந்த அர­சாங்­கத்­தினால் ஊழலை தடுக்­கவும் முடி­யாது, ஊழல் வாதி­களை தண்­டிக்­கவும் முடி­யாது எனவும் அக்­கட்சி    குறிப்­பிட்­டது.  

மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் மக்கள் சந்­திப்பு நேற்று மாத்­த­றையில் இடம்­பெற்­றது. இந் நிகழ்வில் கலந்­து­கொண்ட மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுனில் ஹன்­துன்­நெத்தி மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

இது குறித்து அவர் மேலும் கூறு­கையில். 

தேசிய கணக்­காய்வு சட்­ட­மூலம் அமைச்­ச­ர­வையில் அதன் இயல்­பினை முழு­மை­யாக மாற்றி  மோச­மான திருத்­தங்­க­ளுடன் பாராளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­பட முயற்­சிகள் முன்­னெ­டுக்­கப்­பட்டு வரு­கின்­றன. அமைச்­ச­ர­வையில் இது முழு­மை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. அமைச்­சர்­க­ளுக்கு ஏற்ற

வகை­யி­லேயே கணக்­காய்­வாளர் நாயகம் தனது கட­மை­களை முன்­னெ­டுக்க வேண் டும் என்ற அடிப்­ப­டையில் அர­சாங்கம் திருத்­தங்கள் கொண்­டு­வ­ரு­கின்­றனர். திரு­டர்கள்  என்ன  கூறு­கின்­றனர் என்­பதன் அடிப்­ப­டையில்  கணக்­காய்­வாளர் நாயகம் செயற்­பட வேண்டும் என்­ப­தையே விரும்­பு­கின்­றனர். அமைச்­சர்­க­ளுக்கு அமைய கணக்­காய்வு சட்­ட­மூலம் இயங்­கு­மாயின் அவ்­வா­றான ஒரு சட்டம் நாட்டில் இருப்­பது அர்த்­த­மில்லை. அது தேவையும் இல்லை. கள­வு­களை சட்­ட­மாக்கும் செயற்­பா­டுகள் அவ­சியம் இல்லை. ஒரு சில­ரது தேவை­களை மாத்­திரம்  கருத்திற் கொண்டு அவர்­களை காப்­பாற்ற வேண்டும் என்ற கார­ணத்­தினால் ஒரு கணக்­காய்வு சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்தில் கொண்­டு­வந்து நிறை­வேற்­றப்­பட நாம் ஒரு­போதும் இட­ம­ளிக்க மாட்டோம். 

இந்த கணக்­காய்வு சட்­ட­மூ­லத்­திற்கு கொடுக்கும் அவ­ம­திப்பை,  நாம் மக்கள் மத்­தியில் கொண்டு செல்வோம். உண்­மை­யாக கார­ணத்­தினை மக்­க­ளுக்கு எடுத்­து­ரைத்து அர­சாங்கம் செய்யும் மோச­டி­களை வெளிச்­சத்­திற்கு கொண்­டு வ­ருவோம். இந்த அர­சாங்­கதின் உண்­மை­யான நோக்கம் என்­ன­வென்­பதை நாம் மக்­க­ளுக்கு தெரி­விப்போம். வார்த்­தையில் ஒன்­றையும் செயலில் மற்­று­மொன்­றையும்  வெளி­ப­டுத்தும் ஆட்­சி­யா­ளர்­களே இவர்கள். ஊழல், கொள்ளை, மோச­டி­களை முழு­மை­யாக அழிப்­ப­தாக இவர்கள் வாய் திறந்து பேசு­கின்­றனர். ஊழ­லில்­லாத நாட்­டினை உரு­வாக்­கு­வ­தாக கூறு­கின்­றனர். ஆனால் தேசிய கணக்­காய்வு சட்­ட­மூலம் கொண்­டு­வரும் போது அதனை தடுக்கும் வகையிலோ அல்லது தமக்கு தேவையான வகையில் மாற்றங்களை கொண்டுவரும் வகையில் செயற்பட்டு வருகின்றனர். இந்த அரசாங்கத்தினால்  ஊழலை தடுக்கவும் முடியாது, களவெடுக்காது இருக்கவும் முடியாது, கள்வர்களை தண்டிக்கவும் முடி யாது எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51