அரசாங்கம் பதில் சொல்வதில் பின்னடைவை சந்தித்துள்ளது

Published By: Priyatharshan

14 Oct, 2017 | 12:28 PM
image

முன்னைய குற்றவாளிகள் தொடர்பில் மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு அரசாங்கம் பதில் சொல்வதில் பின்னடைவை சந்தித்துள்ளது என பீல்ட் மார்ஷல் அமைச்சர் சரத் பொன்சேகா தெரிவித்தார். 

சட்டத்தை மீறி செயற்படும் ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்குதல் மூலமாக தடுப்பது ஒருபோதும் தவறாகாது எனவும் அவர் குறிப்பிட்டார். 

கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில், 

நாட்டின் சொத்துக்கள் எதனையும் சர்வதேச நாடுகளுக்கு விற்கவோ தாரைவார்த்துக் கொடுக்கவோ அரசாங்கம் எந்த நடவடிக்கைகளையும் முன்னெடுக்கவில்லை. இந்த நாட்டின் பொருளாதாரம் இன்று பாரிய வீழ்ச்சியினை கண்டுள்ளது என்றால் அதற்கும் முன்னைய ஆட்சியாளர்கள் செய்த மோசமான அபிவிருத்தி செயற்பாடுகளே காரணமாகும். எனினும் நாம் இந்த நாட்டினை மீட்டெடுக்க தேசிய சொத்துக்களை விற்பதாக கூறுவது பொய்யான குற்றச்சாட்டாகும். 

நாம் எமது வளங்களை நீண்டகால குத்தகைக்கு விடுவதன் மூலமாக நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம். எமது வேலைத்திட்டங்களை தடுக்கவே சிலர் கூச்சலிட்டு வருகின்றனர். அம்பாந்தோட்டையில் இடம்பெற்றதும் அவ்வாறான அரச விரோத செயற்பாடேயாகும். 

மேலும் முன்னைய ஆட்சியில் போன்று ஆர்ப்பாட்டங்களை முன்னெடுக்கும் போது துப்பாக்கிச்சூடு நடத்தி ஆர்ப்பாட் டங்களை நாம் கட்டுப்படுத்தவில்லை. இன்றும் பல்வேறு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்ற வண்ணமே உள்ளன. ஆனால் அவை ஜனநாயக ரீதியில் இடம்பெறும் பட்சத்தில் நாம் தாக்குதல் நடத்துவதில்லை. சட்டத்தை மீறி செயற்படும் போது நிலைவரங்களை கட்டுப்படுத்த பொலிஸார் தாக்குதல் நடத்துகின்றனர்.  இந்த செயற்பாடு ஒருபோதும் தவறில்லை. அண்மையில் ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தை நடத்தக்கூடாது என்ற நீதிமன்ற கட்டளை இருந்த போதிலும் அதனை மீறி காட்டுமிராண்டித்தனமான வகையில் செயற்பட்ட நிலையில் பொலிஸார் தடியடி தாக்குதலை நடத்தி நிலைமைகளை கட்டுப்படுத்தினர். ஆகவே இதனை தவறாக ஒருபோதும் கூற முடியாது. 

அத்துடன் நாம் சில விடயங்களில்   தவறிழைத்து வருகின்றோம். அதனை பகிரங்கமாக நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும். கடந்த கால ஊழல் மோசடிகள் அனைத்திலும் தொடர்புபட்ட நபர்கள் மீதான குற்றங்கள் தொடர்பில் சரியாக கையாளாது மக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் கூற வேண்டிய விடயங்களில் அரசாங்கம் பின்னடைவினை கண்டுள்ளது என்பதை நான் ஏற்றுக் கொள்கின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பொலிஸாரால் யாழ் - நெல்லியடியில் கசிப்புக்...

2024-03-28 21:35:50