சவூதி அரே­பி­யாவில் பொய்க் குற்­றச்­சாட்டில் சிறை­வாசம் அனு­ப­வித்து வந்த இலங்­கை­ய­ருக்கு அமைச்சர் தலதா அத்து­கொர­ளவின் தலை­யீட்டின் மூலம் நஷ்­ட­ஈடு பெற்­றுக்­கொ­டுக்­கப்­பட்­டுள்­ள­தாக வெளி­நாட்டு வேலை­வாய்ப்பு பணி­யகம் அறி­வித்­துள்­ளது.

இது தொடர்­பாக பணி­யகம் விடுத்­துள்ள அறிக்­கையில் தெரி­விக்­கப்­பட்­டுள் ­ள­தா­வது,

வெலி­மட லந்­தே­கம பிர­தே­சத்­தைச்­சேர்ந்த முஹம்மத் ஹசீம் கடந்த 2011. 11. 27 ஆம் திகதி சவூதி அரே­பி­யா­வுக்கு வீட்டு சாரதி தொழி­லுக்­காக சென்­றுள்ளார். அங்கு அவர் பணி­பு­ரிந்த காலப்­ப­கு­தியில் 15 மாதங்­க­ளுக்கு அவ­ருக்­கு­ரிய சம்­பளப் பணம் வழங்­கப்­ப­ட­வில்லை என அவ­ரது உற­வி­னர்­களால் கடந்த 2015.05.09 ஆம் திகதி பணி­ய­கத்தில் முறைப்­பாடு தெரி­விக்­கப்­பட்­டி­ருந்­தது.

அத்­துடன் அவர் பணிபுரிந்து வந்த வீட்டு எஜமான் அவர் மீது பொய்க் குற்­றச்­சாட்டு தெரி­வித்து அவ­ருக்கு எதி­ராக வழக்கு தொடர்ந்­ததால், 3 மாதமும் 11 நாட்களும் அவர் சிறை­யி­ல­டைக்­கப்­பட் டார். 

தொழில் நீதி­மன்­றத்தில் இடம்­பெற்ற வழக்கு விசா­ர­ணையின் பின்னர் குறித்த நப­ருக்கு வழங்­கப்­ப­ட ­வேண்­டிய 15 மாதங்­க­ளுக்­கு­ரிய சம்­பளப் பண­மான 18850 சவூதி ரியால் கிடைக்­கப்­பெற்­றதும் அவர் மீண்டும் நாட்­டுக்கு திரும்­பி ­வந் தார்.

என்­றாலும் முஹம்மத் ஹசீம் 3 மாதமும் 11 நாட்களும் பொய்க் குற்­றச்­சாட்டின் பேரில் சிறை­யி­ல­டைக்­கப்­பட்ட தகவல் அமைச்சர் தலதா அத்து­க்கொர­ள­வுக்கு கிடைக்­கப்­ பெற்­றதும், அவர் சவூ­தி யிலுள்ள இலங்கை தூத­ர­கத்­துக்கு வழங்­கிய ஆலோ­ச­னையின் அடிப்­ப­டையில், பொய்க் குற்­றச்­சாட்டு தெரி­விக்­கப்­பட்டு சிறை­யி­ல­டைக்­கப்­பட்ட கார­ணத்தால் அவ­ருக்கு ஏற்­பட்ட பாதிப்­புக்­காக நஷ்­ட­ஈடு கோரி வழக்குத் தொட­ரப்­பட்­டது.

பாதிக்­கப்­பட்ட நபர் சவூ­தியில் இல்­லாத நிலையில்  அந்த நாட்டு நீதி­மன்றம் வழக்கை விசா­ரணை செய்­த­துடன் பொய்க் குற்­றச்­சாட்டின் பேரில் சிறை­யி­ல­டைக்­கப்­பட்­டதால் அவ­ருக்கு ஏற்­பட்ட பாதிப்­புக்­காக அவர் பணிபுரிந்த வீட்டு எஜ­மா­னுக்கு  19850 சவூதி ரியால் நஷ்டயீடாக வழங்குமாறு  கடந்த 2017.08.21 ஆம் திகதி பணித்திருந்தது. அதனடிப்படையில் பெற்றுக்கொள்ளப்பட்ட நிதி  அமைச்சரி னால் கடந்த செவ்வாய்க்கிழமை அவருக்கு வழங்கிவைக்கப்பட்டது.