அர­சியல் கைதி­களென இலங்கை சிறையில் எவரும் இல்லை. சிறையில் அடைக்­கப்­பட்­டுள்ள அனை­வ­ருமே விடு­த­லைப்­பு­லிகள். வடக்கின் அர­சி­யல்­வா­திகள் கூறு­கின்­றனர் என்­ப­தற்­காக புலி­களை விடு­தலை செய்ய முடி­யாது என்று பாது­காப்பு இரா­ஜாங்க அமைச்சர் ருவான் விஜ­ய­வர்­தன தெரி­வித் தார். வடக்கில் ஹர்த்தால் நடத்தி சாதிக்­கப்­போ­வது ஒன்­று­மில்லை. இவை அனைத்­தும் வடக்கின் அர­சியல் நாட­கமாகும் என்றும் அவர் குறிப்­பிட்டார். 

பிய­கம பிர­தே­சத்தில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே அவர் இதனைக் குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறி­யதாவது;

சிறையில் உள்ள விடு­தலைப் புலி­களை விடு­தலை செய்­யக்­கோ­ரியே இன்று தமிழ் மக்­களில் ஒரு சாரார் போராட்­டங்­களை நடத்தி வரு­கின்­றனர். எனினும் அவர்கள் கோரி­ய­தற்­காக, உண்­ணா­வி­ரதம் இருந்து போராட்டம் நடத்­து­வதால் அல்­லது ஹர்த்தால் நடத்­து­வதால் விடு­தலைப் புலி­களை விடு­தலை செய்ய இய­லாது. இப்­போது சிறையில் உள்ள அனை­வரும் யுத்­தத்தின் போது மோச­மாக செயற்­பட்ட முக்­கி­ய­மான நபர்­களே. 

இவர்களை பாரிய குற்­றங்­களில் கைது செய்­துள்ளோம். இப்­போது அர­சியல் வாதிகள் தமது தேவைக்­காக செய்யும் போராட்­டங்­களை கொண்டோ அல்­லது கோரிக்கை விடு­வதன் மூலமோ அவர்­களை விடு­விக்க வேண்­டிய அவ­சியம் எமக்கு இல்லை. அதேபோல் நீதி­மன்­றத்தில் நிறுத்தி விசா­ரிக்க வேண்டும் என்ற ஒரு கோரிக்கை உள்­ளது. அதனை நாம் செய்ய வேண்டும். நீதி­மன்­றத்தில் ஒப்­ப­டைத்து உரிய நட­வ­டிக்­கை­களை  நாம் எடுக்க வேண்டும். நீதி­மன்­றத்தில் ஒரு தீர்வு வழங்­கப்­பட வேண்டும். 

நீதி அமைச்சர் இந்த விட­யங்­களை நன்கு அறிந்­துள்ளார். இப்­போது அதற்­கான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக நான் கரு­து­கின்றேன் . 

ஆனால் வடக்கின் அர­சியல் வாதிகள் தமது அர­சியல் நோக்­கங்­களை நிறை­வேற்­றிக்­கொள்ள வடக்கில் மக்­களை தூண்­டி­விட்டு ஹர்த்தால், ஆர்ப்­பாட்­டங்­களை நடத்­து­வது வருந்தத்தக்கவிட­ய­மாகும். மீண்டும் குழப்­பங்­களை ஏற்­ப­டுத்த இவர்கள் முயற்­சிக்­கின்­றனர். வடக்கு மாகா­ண­ச­பைக்கு கிடைத்­துள்ள நிதியில் கூட மக்­க­ளுக்கு சேவை செய்­யாத இவர்கள் மக்­களை குழப்பும் நட­வ­டிக்­கை­களை மேற்கொண்டு அர­சியல் வாய்ப்­பு­களை பெற்­றுக்­கொள்ள முயற்­சி­கின்­றனர். எவ்­வாறு இருப்­பினும் கைதி­களை விடு­தலை செய்ய நாம் ஒரு­போதும் தயா­ராக இல்லை. இவர்­களை நீதி­மன்­றத்தில் நிறுத்தி சட்ட நட­வ­டிக்­கை­களை எடுப்போம். இவர்­களை அர­சியல் கைதிகள் என கூறு­வதை ஒரு­போதும் ஏற்­று­கொள்ள முடி­யாது. 

இவர்கள் புலி­களின் பயங்­க­ர­வாத உறுப்­பி­னர்கள். இவர்களை விடுதலை செய்தால் மீண்டும் நாட்டில் குழப்பங்களை ஏற்படுத்தும் சூழலை இவர்கள் உருவாக்குவார்கள் என்ற சந்தேகம் உள்ளது. வடக்கின் அரசியல்வாதிகள் கூறும் கதைகளுக்கு ஏற்ப எம்மால் செயற்பட முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.