தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணி-­, ஜ­ன­நா­யக மக்கள் முன்­னணி தலை­வரும், தேசிய சக­வாழ்வு கலந்­து­ரை­யாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்­ச­ரு­மான மனோ கணேசன், நேற்று நண்­பகல் ஜனா­தி­ப­தி மைத்திரிபால சிறிசேனவை சந்­தித்து தமது வழக்­குகள் அனு­ரா­த­பு­ரத்­துக்கு மாற்­றப்­பட்­ட­மையை எதிர்த்து 18 நாட்­க­ளாக உண்­ணா­வி­ரதம் இருக்கும் அர­சியல் கைதிகள் விவ­காரம் தொடர்­பிலும், இந்­நி­லைமை கார­ண­மாக வடக்கில் நடை­பெறும் போராட்­டங்கள் தொடர்­பிலும்  கலந்துரையாடியுள்ளார்.

இது­பற்றி கருத்து கூறிய அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்­த­தா­வது,

ஜனாதிபதியுடனான பேச்­சு­வார்த்­தை­யின்­போது, கைதிகளின் விவகாரம் தொடர்பில்  வடக்கில் நடை­பெறும் எதிர்ப்பு போராட்­டங்கள் கார­ண­மாக அங்கு சட்டம் ஒழுங்­கிற்கு பாதகம் ஏற்படவில்லை என தனக்கு வட மாகாண பொலிஸ் மா அதி­பரும், இரா­ணுவ தள­ப­தியும் கூறி­யுள்­ள­தாக  ஜனா­தி­பதி என்­னிடம் கூறினார். 

சட்டம் ஒழுங்­கிற்கு பாதகம் இல்­லை­யா­னாலும் அர­சி­யல்­ரீ­தி­யாக இது பெரும் நெருக்­கடி நிலை­மையை வடக்கில் ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது என நான் ஜனா­தி­ப­திக்கு எடுத்து கூறினேன். 

இதை­ய­டுத்து, சட்­டமா அதி­பரை தொலை­பே­சியில் தொடர்பு கொண்ட ஜனா­தி­பதி இது­பற்­றிய சட்ட மா அ­தி­பரின் கருத்தை கேட்டு தெரிந்­துக்­கொண்டார். இந்த வழக்கின் சாட்­சி­க­ளாக இருக்­கின்ற முன்னாள் தமி­ழீழ விடு­தலை புலிகள் இயக்க உறுப்­பி­னர்­களே தங்­க­ளுக்கு பாது­காப்பை கோரி வவு­னி­யா­வுக்கு செல்ல இய­லாது என கூறு­வ­தா­கவும், இத­னா­லேயே இந்த சிக்கல் ஏற்­பட்­டுள்­ள­தாக  சட்­டமா அதிபர் கூறு­வ­தாக, ஜனா­தி­பதி என்­னிடம் சுட்டிக்காட்டினார். 

இன்று யுத்தம் முடிந்த நிலையில் நாட்டின் எல்லா பகு­தி­க­ளுக்கும் எவரும் சென்று வரக்­கூ­டிய நிலையில், சட்­ட­மா­ அ­திபர் இத்­த­கைய முடிவை எடுத்­தி­ருப்­பது தமிழ் மக்­க­ளுக்கு தவ­றான செய்­தியை தரு­கி­றது என நான் அவரிடம் எடுத்து கூறினேன். 

வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே மற்றும் இன்று யாழ்ப்­பா­ணத்தில் நடை­பெற உள்ள தமிழ்த்­தின விழாவை பொறுப்­பேற்று செய்யும் எமது கூட்­ட­ணியின் பிரதி தலை­வரும், கல்வி ராஜாங்க அமைச்­ச­ரு­மான இராதா­கி­ருஷ்ணன் ஆகி­யோரும் என்னை தொலை­பே­சியில் தொடர்பு கொண்டு இன்று காலை  பேசி­னார்கள். அவர்கள் இரு­வ­ரும்­கூட இது தொடர்பில் எனது கருத்­தையே கொண்­டுள்­ளனர் என நான் மேலும் ஜனா­தி­ப­தி­யிடம் கூறினேன். 

இது­பற்றி தான் மேலும் ஆராய்ந்து முடிவை எடுப்­ப­தாக ஜனா­தி­பதி என்­னிடம் கூறினார். இது இன்று தமிழ் மக்­களை பொறுத்­த­வ­ரையில் திருப்­தி­க­ர­மான பதி­லாக இல்­லாமல் இந்த விவ­காரம் தொடர்ந்து இழு­ப­றி­யி­லேயே இருப்­பதை காட்­டு­கி­றது. இது நமது அரசாங்கத்துக்கு, தமிழ் மக்கள் மத்தியில் இருக்கின்ற நற்பெயரை பாதிக்கும். எனவே நியாயமான முடிவை எடுங்கள் என கூறிவிட்டு வந்தேன்.  இது தொடர்பில் தான் மேலும் ஆராய்ந்து பார்த்து முடிவுகளை எடுப்பதாக ஜனாதிபதி என்னிடம் தெரிவித்தார்.