எனது விஜ­யத்தின் போது அர­சாங்­கத்­த­ரப்பு, சிவில் சமூக  தரப்பு உள்­ளிட்ட   அனை­வ­ரையும்  சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளேன்.  நான் எனது விஜ­யத்தின் போது உயர்ந்த மட்­டத்­தி­லான அவ­தா­னிப்­புக்­களை செய்­வ­தற்கு முயற்­சிப்பேன்.   நம்­பிக்கை என்­பது இங்கு மிகவும்  முக்­கி­ய­மா­னது.

நம்­பிக்கை நல்­லி­ணக்­கத்தில் பல வழி­களில் செயற்­ப­டு­கின்­றது  என்று இலங்கை வந்­துள்ள  உண்மை நீதி  நட்­ட­ஈடு மற்றும்  மீள்­நி­க­ழாமை தொடர்­பான  ஐக்­கிய நாடு­களின் விசேட பிர­தி­நிதி   பப்லு டி கிரிப் தெரி­வித்தார்.  

யாழ்ப்­பா­ணத்தில் நேற்று  நடை­பெற்ற கருத்­த­ரங்கு ஒன்றில் கலந்­து­கொண்டு  அங்கு எழுப்­பப்­பட்ட கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிக்­கை­யி­லேயே  அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.  

அவர் அங்கு மேலும் குறிப்­பி­டு­கையில்  

உண்மை, நீதி, நட்­ட­ஈடு மற்றும் மீள் மோதல் நிக­ழாமை  ஆகிய கார­ணிகள் ஒன்­றுக்­கொன்று ஒத்­து­ழைப்பு வழங்கும்  வகையில் அமைந்­தி­ருக்­கின்­றன.   இந்த விட­யத்தில்  சிவில் சமூ­கத்தை ஒரு வள­மாக பயன்­ப­டுத்­த­வேண்டும்.  

அர­சாங்கம் பொறுப்­புக்­கூறல் பொறி­முறை சட்­ட­மூ­லத்தை கொண்­டு­வ­ரும்­நோக்கில் சிவில் சமூகம் செயற்­ப­ட­வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.  அத்­துடன் நிலை­மா­று­கால நீதி தொடர்­பான அடிப்­படை  விட­யங்கள் நிலை­நாட்­டப்­ப­ட­வேண்­டி­யதன் அவ­சியம் தேவை­யா­ன­தாகும் 

எனது விஜ­யத்தின் போது அர­சாங்­கத்­த­ரப்பு, சிவில் சமூக  தரப்பு உள்­ளிட்ட   அனை­வ­ரையும்  சந்­தித்து பேச்சு நடத்­த­வுள்ளேன்.  நான் எனது    விஜ­யத்தின் போது உயர்ந்த மட்­டத்­தி­லான அவ­தா­னிப்­புக்­களை செய்­வ­தற்கு முயற்­சிப்பேன்.   நம்­பிக்கை என்­பது இங்கு மிகவும்  முக்­கி­ய­மா­னது. நம்­பிக்கை  நல்­லி­ணக்­கத்தில் பல வழி­களில் செயற்­ப­டு­கின்­றது.  

நான்  கடந்த முறை ஐக்­கி­ய­நா­டுகள் பொதுச்­ச­பைக்கும்  ஐக்­கி­ய­நா­டுகள்  மனித உரிமை பேர­வைக்கும் இரண்டு அறிக்­கை­களை தாக்கல் செய்­தி­ருந்தேன்.  இம்­முறை நியூயோர்க்  திரும்­பி­யதும் ஐ.நா. பொதுச்­ச­பைக்கு  மற்­று­மொரு அறிக்­கையை சமர்ப்­பிக்­க­வுள்ளேன்.   நீதி மறைக்­கப்­ப­டவோ, தனி­மைப்­ப­டுத்­தப்­ப­டவோ முடி­யாது.  நிலை­மா­று­கால நீதி­யா­னது  தோல்­வியை உரு­வாக்கும். தீர்­மானம் எடுத்தல், போன்­ற­வற்றில் பாரிய தாக்­கத்தை ஏற்­ப­டுத்தும்.  

நான்  இங்­குள்ள நிலை­மை­களை அவ­தா­னிப்­ப­தற்­காக அழைக்­கப்­பட்­டுள்ளேன். அடுத்­த­வாரம் கொழும்பில் ஊட­க­வி­ய­லா­ளர்­களை சந்­திப்பேன் அதன்­போது இங்கு எழுப்­பப்­பட்ட பல்­வேறு கேள்­வி­க­ளுக்கு பதி­ல­ளிப்பேன்.  வேறு­பட்ட நாடு­களில்  வேறு­பட்ட வித­மான பிரச்­சி­னைகள் காணப்­ப­டு­கின்­றன.  

விசேட அறிக்­கை­யா­ளர்கள் என்­ப­வர்கள் ஐக்­கி­ய­நா­டுகள் சபையின் உத்­தி­யோ­கத்­தர்கள் அல்ல.   விசேட அறிக்­கை­யா­ளர்கள் எப்­போதும்   ஐக்­கி­ய­நா­டுகள் மனித உரிமை பேர­வைக்கும், ஐக்­கி­ய­நா­டுகள் பொதுசபைக்கும் அறிக்கையிடுவதற்கு மட்டுமே ஆணையைக் கொண்டுள்ளார்கள்.  இலங்கையின் இந்த நல்லிணக்க பொறிமுறை செயற்பாட்டில் ஐக்கியநாடுகள் சபை ஒரு முக்கியமானதொரு வகிபாகத்தை  கொண்டுள்ளது. 

கடந்த இரண்டு வருடங்களில்  நான்  சில தடவைகள்   இங்கு வந்திருக்கின்றேன். நான் எனது கடமையை தொடர்ந்து முன்னெடுப்பேன்.