சுதந்திர கட்சியில் இருந்து விலகி வேறொரு கட்சி உருவாக்கப்படுமாக இருந்தால், அதற்கு மகிந்த ராஜபக்ஷவே தலைமை தாங்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெருவித்துள்ளார் .

சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தனித்து அரசியல் கட்சி ஒன்றை உருவாக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தன.

அக்கட்சியில் மகிந்தராஜபக்ஷவின்றி வேறாரேனும் தலைவராக செயற்படுவாராக இருந்தால், தாம் அரசியலில் இருந்தே விலக தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.