அவுஸ்திரேலியாவை சேர்ந்த  சேஸ் - கெல்லி கிளார்க் தம்பதிகள் தங்கள் திருமணம் முடிந்தவுடன் ஓசியானியா நாட்டில் உள்ள   பிஜி'ஸ் சிகாட்டோகா ரிசார்ட்டுக்கு தேனிலவுக்கு சென்றிருந்த போது புது மணப் பெண்  மர்மகாய்ச்சலால் உயிரிழந்துள்ளார்.

தேனிலவு கொண்டாட்டத்தின்போது கெல்லிக்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. சாதாரண வயிற்றுவலிதானே விரைவில் சரியாகிவிடும் என நினைத்து அன்று இரவு படுக்கைக்கு சென்றுள்ளார்.

ஆனால் அடுத்தநாள் காலையில் காய்ச்சல் ஏற்பட்டதால் உடனடியாக அங்கிருந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கெல்லி, அங்கு அவருக்கு சிகிச்சையளிக்கப்பட்டபோதும் காய்ச்சல் குணமாகமால் கோமா நிலைக்கு சென்றுள்ளார்.

வைத்தியசாலையில் அவருக்கு நெருப்புக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது, மேலும் பூஞ்சை கிருமி தொற்று ஏற்பட்டு அவரது நுரையீரல் பாதிக்கப்பட்டுள்ளது என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

கேமாவிலேயே இருந்த கெல்லி அதிலிருந்து மீளாமல் இரண்டு நாளில் உயிரிழந்தார்.

மனைவியின் இழப்பை தாங்காத சேஸ், 

"புதுமணப்பெண்ணாக துள்ளிக்குதித்த கெல்லி எவ்வாறு திடீரென உயிரிழந்தார் என்பதை என்னால் நம்பமுடியவில்லை, 

எனது மனைவி மிகவும் அழகானவள், அறிவானவள். இந்த திருமணத்தின் மூலம் எனது எதிர்காலம் சிறப்பாக இருக்கும் என நம்பினேன், ஆனால் எனது வாழ்க்கை இருட்டிவிட்டது.

எனது மனைவி இறந்துவிட்டாள் என்பதை இதுவரை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை" என கூறியுள்ளார்.

தனது மனைவியின் சடலத்தை அதிகாரிகளின் உதவியுடன் அவுஸ்திரேலியாவுக்கு எடுத்துசென்றுள்ளார்