இலங்கை காப்புறுதிக் கூட்டுத் தாபனத்தின் புதிய நிர்வாக இயக்குனராக நிலு விஜேதாஸ நியமிக்கப்பட்டுள்ளார். இத்தகவலை பொது நிறுவன வளர்ச்சிக்கான அமைச்சு அறிவித்துள்ளது. சாதி தாவூத் இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கமைய, உப முகாமைத்துவ இயக்குனர் பதவி அகற்றப்பட்டு, அதற்குப் பதிலாக நிர்வாக இயக்குனர் என்ற பதவி உருவாக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே உப முகாமைத்துவ இயக்குனர்களாகப் பதவி வகித்த அருண சிறிவர்தன மற்றும் டி.எம்.ஆர்.பன்ஸா ஜாயா ஆகியோர் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.