பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் பொலிஸார் ஒருவரைத் தாக்கிவிட்டுச் சென்ற பெண்ணால் நீதிமன்ற நடவடிக்கைகள் 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது. 

நீதி மன்றில் தனது கணவர் சம்மந்தப்பட்ட வழக்கு ஒன்றுக்கு வந்தபோதே தனது கணவரையும்,  நீதிமன்ற சாட்சி கூண்டுக்கு அருகில் வைத்து பண்டாரகம பொலிஸ் அதிகாரி சுனில் என்பவரையும்  குறித்த பெண் தாக்கியுள்ளார்.

எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட இந்த நிகழ்வினால் நீதிமன்ற நடவடிக்கைகள் 30 நிமிடங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பெண் நேற்றைய தினம் காலை 8.30 மணியளவில் நீதிமன்ற வளாக வாசலில் பெண் பொலிஸாரையும் கடுமையாக திட்டியதோடு குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரியை தாக்கிவிட்டு வெளியே வந்தபோது குறித்த பெண் நீதிமன்றப் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு, விளக்கமறியலில் வைத்திருக்கும் அதே நேரம் மனநல மருத்துவமனைக்கும் அனுப்புமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.