(ஆர்.யசி)

நுவரேலியா, அம்பகமுவ பிரதேச சபைகளை 5 அலகுகளாக பிரிப்பது குறித்து மலையக தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களுடன் பேச்சுவாரத்தை முன்னெடுக்கவுள்ளதாக மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.  மாநகர, நகர, பிரதேச சபைகள் தேர்தல் திருத்த சட்டமூலம் செவ்வாய்க்கிழமை வர்த்தமானி அறிவித்தலுக்கு விடப்படும் சாத்தியம் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். 

பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட  மாநகர, நகர, பிரதேச சபைகள் தேர்தல் திருத்த சட்டமூல பிரதியை தேர்தல்கள் ஆணைக்குழு தலைவரிடம் இன்று கையளித்த மாகாணசபை மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து கூறிகையில் இதனை தெரிவித்தார்.