சீனாவில் கருவுற்று 35 வாரங்களே ஆன சிசு ஒன்று, தனது தாயின் கருப்பையை கால்களால் எட்டி உதைத்து வெளியே வந்துள்ளதால் அவசரமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டு  குழந்தை வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.

ஷான் என்ற பெண்மணி கர்ப்பமாக இருந்துள்ளார், 35 வாரங்களே ஆகியுள்ள நிலையில் இவருக்கு திடீரென பயங்கரமாக வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது.

சுமார் 5 மணிநேரமாக வயிற்று வலி தொடர்ந்து கொண்டே இருந்ததால் வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்,  ஷானை பரிசோதித்து  பார்த்த  வைத்தியர்கள் குழந்தையின் கால்கள் பெண்ணின் கருப்பையிலிருந்து  வெளியே வந்து தாயினுடைய அடிவயிற்றில் ஊடுருவியபடி இருப்பதை அவதானித்துள்ளனர்.

குழந்தை தனது கால்களால் எட்டி உதைத்ததாலேயே  தாய்க்கு தொடர்ந்து 5 மணிநேரமாக வயிற்று வலி ஏற்பட்டுள்ளது என தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து அறுவை சிகிச்சை செய்து 10 நிமிடத்தில் பெண் குழந்தையை வைத்தியர்கள் வெளியே எடுத்துள்ளனர்.

தற்போது  தாயும், சேயும் நலமாக உள்ளனர்.