ஜி வி பிரகாஷ் குமார், ஷாலினி பாண்டே ஜோடியாக நடிக்கும் புதிய படம் 100% காதல். இதனை அறிமுக இயக்குநர் எம் எம் சந்திரமௌலி இயக்குகிறார். இதன் தொடக்கவிழா சென்னையில் நடைபெற்றது. 

இவ்விழாவில் இயக்குநர் இமயம் பாரதிராஜா சிறப்பு அதிதியாக பங்குபற்றினர். இதன் போது படத்தில் பணியாற்றும் நடிகர்கள் நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் என பலரும் பங்குபற்றினர். 

இதில் பங்குபற்றிய மூத்த நடிகை ஜெயசித்ராவிடம் படத்தைப் பற்றி கேட்டபோது,‘எம்ஜிஆர்-சிவாஜி, ரஜினி -கமல், விஜய்-அஜித் என மூன்று திரைத்தலைமுறையினருடன் இணைந்து நடித்திருக்கிறேன். தற்போது நான்காவது தலைமுறையைச் சேர்ந்த ஜி வி பிரகாஷ்குமார் நடிக்கும் 100% காதல் என்ற படத்தில், ஹீரோயினுக்கு பாட்டியாக நடிக்கிறேன். எமக்கு வாய்ப்பளித்த சி எம்முக்கு அதாவது டைரக்டர் சந்திரமௌலிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.’ என்றார்.

100% காதல் படம் தெலுங்கில் 2011 ஆம் ஆண்டில் வெளியாகி பெரிய வெற்றியைப் பெற்றது. அதில் நாயகியாக தமன்னா நடித்திருந்தார். அவருக்கு பாட்டியாக மூத்த நடிகை கே ஆர் விஜயா நடித்திருந்தார் என்பதும், இப்படத்தினை இயக்கும் இயக்குநர் எம் எம் சந்திரமௌலி இதற்கு முன் திரைப்பட கல்லூரியில் ஒளிப்பதிவு படித்து, ஹொலிவுட்டில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தகவல் : சென்னை அலுவலகம்