விபத்தையடுத்து இடம்பெற்ற கத்திக்குத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் கத்திக்குத்தை மேற்கொண்ட நபர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட சம்பவமொன்று கல்முனையில் இடம்பெற்றுள்ளது.

கல்முனை, கல்முனைக்குடி செய்லான் வீதியில் நேற்றிரவு இரு மோட்டார் சைக்கிள்கள் நேருக்குநேர் மோதி விபத்திற்குள்ளாகியுள்ளன. இதையடுத்து பொலிஸார் தலையிட்டு விபத்து தொடர்பில் சமரசம் செய்து இருவரையும் அனுப்பி வைத்துள்ளனர்.

இதன் பின்னர் விபத்தில் சிக்கிய இருவருக்குமிடையில் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து கத்திக்குத்து இடம்பெற்றுள்ளது.

இக் கத்திக்குத்தில் விபத்து இடம்பெற்ற வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய உதுமா லெப்பை முகமது ராசிக் என்பவரே உயிரிழந்தவராவார். கத்திக்குத்தை மேற்கொண்ட அப்துல் முகமட் உமர் என்பர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இச் சம்பவம் நேற்றிரவு 10 மணியளவில் இடம்பெற்றுள்ளதுடன் கத்திக்குத்தில் இறந்தவரின் சடலம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பில் கல்முனைப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.