இலங்கை – இந்­திய மீனவர் பிரச்­சினை குறித்து இரு­நாட்டு அரச மட்ட பேச்­சு­வார்த்தை நாளை

Published By: Robert

13 Oct, 2017 | 10:39 AM
image

தென்­னிந்­திய மீன­வர்­களின் அத்­து­மீறல் மற்றும் இலங்கை– இந்­திய நீண்­ட­கால மீனவர் பிரச்­சினை குறித்து அரச மட்ட பேச்­சுக்கள் நாளை இந்­தி­யாவின் புது­டில்­லியில் ஆரம்­ப­மா­கின்­றது. 

மீன்­பிடி அமைச்சர் மஹிந்த அம­ர­வீர -இந்­திய விவ­சாய மற் றும் கால்­நடை துறை அமைச்சர் ராதா மோகன் சிங் உள்­ளிட்ட உயர்­மட்ட குழு­வி­ன­ரி­டையே இந்த சந்­திப்­புகள்  நடை­பெ­ற­வுள்­ளன.  அமைச்சர் உள்­ளிட்ட இலங்கை பிர­தி­நி­திகள் இன்று டில்லி நோக்கி பய­ணிக்­கின்­றனர். 

இலங்கை கடல் எல்­லையில் சட்­ட­வி­ரோத முறையில் அத்­து­மீறி மீன்­பி­டியில் ஈடு­படும் இந்­திய மீன­வர்­களின்  பிரச்­சினை தொடரும் நிலையில் இலங்கை- இந்­திய மீன­வர்கள் பிரச்­சினை தொடர்பில்  ஸ்திர­மான தீர்வு ஒன்­றினை பெற்­றுக்­கொள்ள வேண்டும் என்ற கோரிக்கை தொடர்ச்­சி­யாக முன்­வைக்­கப்­பட்டு வரு­கின்­றது. 

 இழு­வைப்­ப­டகு முறை மூல­மாக இந்­திய மீன­வர்கள்  இலங்கை கடல் எல்­லையில் மீன்­பி­டியில் ஈடு­ப­டுதல் இலங்கை மீன­வர்­க­ளுக்கு பாரிய சிக்­கல்­களை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. ஆகவே இவற்­றிற்கு தீர்வு காணும் வகையில்  இலங்­கையின் மீன்­பி­டித்­துறை   அமைச்சர் மஹிந்த அம­ர­வீர மற்றும் இந்­திய விவ­சாய மற்றும் கால்­நடைத் துறை அமைச்சர் ராதா மோகன்சிங் ஆகி­யோ­ருக்­கி­டையில் இந்த சந்­திப்பு நாளை இடம்­பெ­று­கின்­றது.  

மேலும் இந்­திய–இலங்கை மீன­வர்கள் தொடர்­பான  பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் வகையில் இந்த ஆண்டு ஆரம்­பத்தில் இருந்தே சில உயர்­மட்ட பேச்­சுக்கள் இரு நாட்டு அரச தலை­மை­க­ளி­டையில் இடம்­பெற்று வந்­துள்ள நிலையில் அதன் அடுத்­த­கட்ட செயற்­பா­டா­கவே நாளைய சந்­திப்பு அமை­ய­வுள்­ளது.  எல்லை தாண்டும் இந்­திய மீன­வர்­களை கைது செய்­வது குறித்து மாற்று வேலைத்­திட்­டங்­களை முன்­னெ­டுத்தல் , இழுவை பட­கு­களின் அனு­ம­திப்­பத்­தி­ரங்­களை உட­ன­டி­யாக இரத்து செய்தல்,  இரு நாட்டின் புரிந்­து­ணர்வு நகர்­வு­களின் பிர­காரம் முரண்­பா­டில்­லாத செயற்­பா­டு­களை கையா­ளுதல்  போன்ற விட­யங்­களில் இந்த பேச்­சு­வார்த்­தைகள் பல­னுள்­ள­தாக அமையும் என மீன்­பிடித் துறை அமைச்சர் மஹிந்த அம­ர­வீர தெரி­வித்­துள்ளார். 

சர்­வ­தேச கடல் எல்­லையில் மீன்­பி­டியில் ஈடு­ப­டு­வதை தடுத்தல், மீன­வர்­களின் வாழ்­வா­தாரம் மற்றும் மீனவர் விவ­கா­ரத்தில் இலங்கை – இந்­திய இரு நாட்டு கடற்­ப­டை­யி­னரின் நட­வ­டிக்­கைகள் உள்­ளிட்ட பிரச்­சி­னை­க­ளுக்கு நிரந்­தர தீர்வை  எட்­டுதல் குறித்து ஆராயும் வகையில் இதற்கு முன்னர் நான்கு கட்ட பேச்­சு­வார்த்­தைகள் டில்லியிலும், கொழும்­பிலும்  இடம்­பெற்ற நிலையில் இந்த பேச்­சு­வார்த்­தைகள் எதிலும் தீர்­வுக்­கான  ஸ்திர­மான நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை. எனினும் இழு­வைப்­ப­ட­கு­களை பயன்­ப­டுத்தி மீன்­பி­டியில் ஈடு­ப­டு­வதை தடுப்­பது நிறுத்­தப்­படும் என்ற ஒரு வாக்­கு­று­தி­யினை மாத்­திரம்  இந்­திய  அர­சாங்கம் வழங்­கி­யி­ருந்­தது.  

ஆகவே இது குறித்த விவ­கா­ரங்­களை தொடர்ந்தும் ஆராய இலங்கை மற்றும் இந்­திய மீன்­பிடி அமைச்­சுடன் தொடர்­பு­டைய இரு­நாட்டு பிர­தி­நி­திகள் உள்ளடங்கிய கூட்டு சபை  நியமிக்கப்பட்டது.   இந்நிலையில் இந்த கூட்டுசபை ஒவ்வொரு மூன்று மாத இடைவெளியிலும்   ஒரு சந்திப்பை நடத்தி பிரச்சினைகள் குறித்து ஆராயும் என கூறப்பட்டது. அந்த இணக்கப்பாட்டின்   அடிப் படையில் இந்த பேச்சுவார்த்தைகள் இடம்பெறுவதாக மீன்பிடி அமை ச்சு தெரிவித்துள்ளது. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08
news-image

அம்பாந்தோட்டையில் புதிய சுத்திகரிப்பு நிலையம் சினொபெக்...

2024-03-29 15:29:13
news-image

நுவரெலியாவில் ஆடை தொழிற்சாலை ஊழியர்களின் போராட்டம்...

2024-03-29 14:40:51
news-image

பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப்...

2024-03-29 14:32:43
news-image

‘யுக்திய’ நடவடிக்கை : இதுவரை பாதாள...

2024-03-29 14:23:33
news-image

பாணந்துறை அடுக்குமாடி குடியிருப்பில் யுக்திய நடவடிக்கை...

2024-03-29 14:28:04
news-image

500 ரூபாய் இலஞ்சம் பெற்ற பொலிஸ்...

2024-03-29 13:14:04
news-image

ஈஸ்டர் தினத்தை முன்னிட்டு 6,837 பொலிஸார்...

2024-03-29 13:52:53