என்னால் எவ்வாறு முடியுமென ஜனாதிபதி கேள்வி

Published By: Priyatharshan

12 Oct, 2017 | 11:18 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

ஜே . ஆர் . ஜயவர்தனவினால் செய்ய முடியாதததை என்னாள் எவ்வாறு செய்ய முடியும் என கேள்வியெழுப்பியுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன புதிய அரசியலமைப்பு குறித்து முழுமையாக ஆராய்ந்து நடவடிக்கை எடுப்பாதாக உறுதியளித்துள்ளார்.

கூட்டு எதிர்கட்சியின் ஊடக சந்திப்பு இன்று வியாழக்கிழமை பொரள்ளையில் அமைந்துள்ள என்.எம்.பெரேரா நிலையத்தில் இடம்பெற்ற போது எழுப்பப்பட்ட கேள்விற்கு பதிலளிக்கும் போதே பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவனச மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில் ,

நல்லாட்சி அரசாங்கத்தின் புதிய அரசியலமைப்பிற்கான முன்னெடுப்புகள் பிரிவினைவாத்தை நோக்கியே உள்ளது. எனவே புதிய அரசியலமைப்பு விவகாரம் , இராணுவத்திற்கு எதிரான பழிவாங்கல்கள் மற்றும் பௌத்த பிக்குகளுக்கு எதிரான செயற்பாடுபகள் குறித்து ஜனாதிபதிற்கு தெளிவுப்படுத்தினோம்.

1987 ஆம் ஆண்டு இந்தியாவின் அழுத்தத்தில் கொண்டு வரப்பட்ட 13 அரசியலமைப்பு ஊடாக நாடு பிளவுப்பட்டு விட கூடாது என்பதற்காக அப்போதைய ஜனாதிபதியாக இருந்த ஜே . ஆர் ஜயவர்தன சில முக்கிய தடைகளை அரசியலமைப்பிற்குள் வைத்துள்ளார்.

அவற்றை நீக்கி முழுமையாகவே பிளவுப்பட்ட இலங்கையில் சமஷ்டி ஆட்சி முறைமையை ஸ்தாபிப்பதற்கான நடவடிக்கைகளே புதிய அரசியலமைப்பு ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது. எனவே தான் பாராளுமன்றத்தில் புதிய அரசியலமைப்பு பணிகளை முன்னெடுக்கும் சபையிலிருந்து வெளிநடப்பு செய்துள்ளோம்.

அதற்கான விவாதத்தில் கூட கலந்துக் கொள்ள போவதில்லை. எவ்வாறாயினும் ஜே . ஆர் ஜயவர்தனவினால் செய்ய முடியாமல் போனதை நான் எவ்வாறு செய்வது என இந்த சந்திப்பின் பேர்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். 

புதிய அரசியலமைப்பு விடயம் தொடர்பில் மேலும் ஆராய்ந்து பதிலளிப்பதாக மேலும் அவர் தெரிவித்தாக பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அரசு கட்டமைப்புக்களின் பங்குகளைக் கொள்வனவு செய்ய...

2024-04-18 16:30:09
news-image

இளைஞர்கள் எதிர்பார்க்கும் இலங்கை கட்டியெழுப்பப்படும் -...

2024-04-18 23:45:38
news-image

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப்...

2024-04-18 22:24:04
news-image

சுதந்திரக் கட்சியின் உத்தியோகபூர்வமற்ற தலைவராக ரணில்...

2024-04-18 16:53:55
news-image

களுத்துறையில் சுற்றுலா பயணிக்கு வடை மற்றும்...

2024-04-18 21:19:33
news-image

மக்களின் கோரிக்கைக்கு அமைய முறைமை மாற்றத்தை...

2024-04-18 20:45:44
news-image

மே மாத இறுதிக்குள் வடக்கில் 60...

2024-04-18 17:27:02
news-image

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு...

2024-04-18 17:21:57
news-image

உண்ணாவிரதமிருந்து உயிர்நீர்த்த தியாகதீபம் அன்னை பூபதியின்...

2024-04-18 18:54:05
news-image

இராணுவ வீரர்களின் பொதுமன்னிப்பு காலம் தொடர்பில்...

2024-04-18 19:50:26
news-image

பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில்...

2024-04-18 17:13:51
news-image

யாழில் குழாய்க்கிணறுகளை தோன்றுவதால் ஏற்படும் ஆபத்துக்கள்...

2024-04-18 17:29:02