உத்தரப்பிரதேசம் மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள யுனுஸ்பூர் கிராமத்தில் 3 வயது  சிறுமியை பாலியல்  துஷ்பிரயோகம் செய்து கொலை செய்து அலுமாரியினுள் மறைத்து வைத்த கொடூர சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

யுனுஸ்பூர்  பிரதேசத்தை சேர்ந்த லச்லான் சிங் என்பவர் பக்கத்து வீட்டில் உள்ள சிறுமிக்கு உணவு தருவதாக கூறி தனது வீட்டிற்கு அழைத்து வந்து சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்து  பின்னர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக்கொன்று  சிறுமியின் சடலத்தை வீட்டில் உள்ள அலுமாரியில் மறைத்து வைத்துள்ளார்.

சிறுமி காணமால் போனதால் பெற்றோர்கள் அனைத்து இடங்களிலும் தேடி சிறுமி கிடைக்காததனால் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளனர். அவர்கள் கொடுத்த முறைப்பாட்டின்  அடிப்படையில் பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தபோது சிறுமியை லச்லான் சிங் கொன்றது தெரியவந்துள்ளது.

இதையடுத்து லச்லான் சிங் வீட்டின் அலமாரியில் இருந்த சிறுமியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டு பிரேத பரிசோதணைக்காக வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

சிறு குழந்தை என்றும் பாராமல் மிருகத்தனமாக நடந்து கொண்ட குறித்த நபரை கைது செய்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.