அத்திலாந்திக் பகுதியில் உருவாகியிருக்கும் ‘ஒபிலியா’ புயல், எதிர்வரும் ஞாயிறு, திங்கள் தினங்களில் பிரித்தானியாவின் மேற்குப் பகுதியைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1987ஆம் ஆண்டு தெற்கு பிரித்தானியாவைத் தாக்கிய ‘கிறேட்’ புயல் (அல்லது மாபெரும் புயல்) வீசிய ஏறக்குறைய அதே தினத்தில் ஒபிலியாவும் தாக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

தற்போது, மணிக்கு 70 மைல் என்ற வேகத்தில் வீசிவரும் ஒபிலியா, எதிர்வரும் முப்பதாம் திகதி கரையைக் கடக்கும்போது பல மடங்கு வேகம் அதிகரித்திருக்கலாம் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முப்பது ஆண்டுகளுக்கு முன், 1987ஆம் ஆண்டு ஒக்டோபர் பதினைந்தாம் திகதி தெற்கு பிரித்தானியாவைத் தாக்கிய பெரும் புயலால் பதினெட்டுப் பேர் உயிரிழந்ததுடன் சுமார் ஒரு பில்லியன் பவுண்கள் பெறுமதியான சொத்துக்கள் நாசமாகின.