ஸிகா வைரஸால் இந்த வருடம் அமெ­ரிக்க நாடு­களில் 4 மில்­லியன் பேர் வரை பாதிக்­கப்­ப­டு­வ­தற்கு வாய்ப்பு

Published By: Raam

30 Jan, 2016 | 10:07 AM
image

அமெ­ரிக்க நாடு­களில் இந்த வருடம் ஸிகா வைரஸால் 3 மில்­லி­ய­னி­லி­ருந்து 4 மில்­லியன் பேர் பாதிக்­கப்­பட வாய்ப்­புள்­ள­தாக உலக சுகா­தார ஸ்தாபனம் தெரி­வித்­துள்­ளது.

நுளம்­பு­களால் பரப்­பப்­படும் இந்த வைரஸால் பாதிக்­கப்­ப­டு­ப­வர்­களில் பல­ருக்கு நோய­றி­குறி எதுவும் தென்­ப­டாது என்ற போதும், இது குழந்­தைகள் குறை­பா­டு­க­ளுடன் பிறப்­ப­துடன் தொடர்­பு­பட்­டுள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அமெ­ரிக்­கா­வா­னது இந்த ஆண்டின் இறு­திக்குள் இந்த வைர­ஸுக்கு தடுப்பு மருந்தைக் கண்­டு­பி­டிக்க நம்­பிக்கை தெரி­வித்­துள்­ளது.

அதே­ச­மயம் பிரே­சிலில் றியோ டி ஜெனிரோ நகரில் இடம்­பெ­ற­வுள்ள ஒலிம்பிக் விளை­யாட்டுப் போட்டி இந்த வைரஸ் தாக்­கத்தால் பாதிக்­கப்­ப­டாமல் இருப்­ப­தற்­கான பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­துள்­ள­தாக சர்­வ­தேச ஒலிம்பிக் சபை கூறு­கி­றது.

மேற்­படி வைரஸால் உலகில் மிக மோச­மாகப் பாதிக்­கப்­பட்­டுள்ள பிரே­சி­லுக்கு ஒலிம்பிக் விளை­யாட்டுப் போட்­டியில் பங்­கேற்­ப­தற்­காக வரும் விளை­யாட்­டு­ வீரர்­களும் பார்­வை­யா­ளர்­களும் எவ்­வாறு தம்மை தற்­காத்துக் கொள்­வது என்­பது தொடர்பில் ஆலோ­சனை வழங்­கப்­ப­ட­வுள்­ள­தாக சர்­வ­தேச ஒலிம்பிக் சபையின் தலை­வ­ரான தோமஸ் பச் தெரி­வித்தார்.

ஸிகா வைரஸ் சிறிய அச்­சு­றுத்தல் நிலை­யி­லி­ருந்து எச்­ச­ரிக்கைக் கட்­டத்தை அடைந்­துள்­ள­தாக உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் பணிப்­பாளர் நாயகம் கலா­நிதி மார்­கரெட் சான் கூறுகிறார்.

அவர் நாளை மறு­தினம் திங்­கட்­கி­ழமை ஸிகா வைரஸ் தொடர்பில் கலந்­து­ரை­யாட உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் அவ­சரக் கூட்­ட­மொன்றைக் கூட்ட அழைப்பு விடுத்­துள்ளார்.

மேற்­படி கூட்­டத்தில் ஸிகா வைரஸ் பர­வலை உல­க­ளா­விய ரீதி­யான அவ­ச­ர­கால நிலை­மை­யாக பிர­க­ட­னப்­ப­டுத்­து­வதா என்­பது குறித்து தீர்­மானம் எடுக்­கப்­ப­ட­வுள்­ளது.

இதற்கு முன் இத்­த­கைய உல­க­ளா­விய அவ­ச­ர­கால நிலை­மை­யா­னது மேற்கு ஆபி­ரிக்­காவில் பர­விய எபோலா வைரஸ் தாக்­கத்தின் போது பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்­டது.

மேற்­படி வைரஸ் தாக்­கத்தால் 11,000 பேருக்கும் அதி­க­மானோர் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர்.

1947 ஆம் ஆண்டு உகண்­டாவில் குரங்­கொன்றில் முதன் முத­லாக ஸிகா வைரஸ் அடை­யாளம் காணப்­பட்­டது. தென் அமெ­ரிக்­காவில் பிரே­சிலில் மேற்­படி வைரஸ் தாக்கம் கடந்த ஆண்டு மே மாதம் முதன்­மு­த­லாக அடை­யாளம் காணப்­பட்­டது.

பல சந்­தர்ப்­பங்­களில் எது­வித நோய­றி­கு­றி­க­ளையும் வெளிப்­ப­டுத்­தாத இந்த வைரஸ் தொற்றை பரி­சோ­தனை மேற்­கொண்டு கண்­ட­றி­வதும் கடி­ன­மாகும்.

இந்­நி­லையில் பிரே­சிலில் 500,000 க்கும் 1.5 மில்­லி­ய­னுக்கும் இடைப்­பட்ட தொகை­யானோர் இந்த வைரஸ் தொற்­றுக்­குள்­ளா­க­வுள்­ள­தாக உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

தற்­போது அந்த வைரஸ் பிராந்­தி­யத்தில் 20 க்கு மேற்­பட்ட நாடு­களில் பர­வி­யுள்­ளது.

அமெ­ரிக்­காவில் இது வரை ஸிகா வைரஸ் தொற்­றுக்­குள்­ளான 31 பேர் அடை­யாளம் காணப்­பட்­டுள்­ளனர். அவர்கள் பாதிக்­கப்­பட்ட பிராந்­தி­யங்­க­ளுக்கு பயணம் மேற்­கொண்ட சமயம் இந்தத் தொற்­றுக்­குள்­ளா­ன­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அதே­ச­மயம் உலக சுகா­தார ஸ்தாப­னத்தின் பான் அமெ­ரிக்கன் சுகா­தார ஸ்தாப­னத்தின் பிராந்­திய பணிப்­பா­ள­ரான கலா­நிதி கரிஸ்ஸா எதி­யன்னி விப­ரிக்­கையில், குறை­பா­டு­க­ளுடன் குழந்­தைகள் பிறப்­ப­தற்கும் ஸிகா வைரஸ் தாக்­கத்­துக்கும் தொடர்­பி­ருப்­ப­தாக இன்னும் உறு­திப்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை எனத் தெரி­வித்தார்.

ஆனாலும் இவ்­வாறு குழந்­தைகள் குறை­பாட்­டுடன் பிறப்­பதை சகித்துக் கொண்­டி­ருக்க முடி­யாது என அவர் மேலும் கூறினார்.

ஸிகா வைரஸ் தொற்றைத் தடுக்க இரு தடுப்பு மருந்­து­களை உரு­வாக்­கி­யுள்­ள­தா­கவும் அவற்றில் ஒன்று இந்த ஆண்டு இறு­திக்குள் பரீட்­சார்த்­த­மாக பயன்­ப­டுத்­தப்­ப­ட­வுள்­ள­தாகவும் அமெ­ரிக்க தேசிய சுகா­தார நிறு­வ­கத்தைச் சேர்ந்த அதி­கா­ரிகள் தெரி­விக்­கின்­றனர்.

கருக்­க­லைப்­புக்கு அனு­ம­திக்க கோரி நீதி­மன்­றத்தில் மனுத் தாக்கல்

இந்­நி­லையில் பிரே­சிலைச் சேர்ந்த சட்­டத்­த­ர­ணிகள், செயற்­பாட்­டா­ளர்கள் மற்றும் விஞ்­ஞா­னி­களைக் கொண்ட குழு­வொன்று ஸிகா வைரஸ் தொற்­றுக்­குள்­ளான கர்ப்­பிணிப் பெண்­க­ளுக்கு கருக்­க­லைப்பு செய்ய அனு­ம­திக்­கு­மாறு நீதி­மன்­றத்தில் மனுத் தாக்கல் செய்ய நட­வ­டிக்கை எடுத்­துள்­ளது.

இது தொடர்பில் பிரே­சி­லியா பல்­க­லைக்­க­ழ­கத்தின் சட்டப் பேரா­சி­ரியர் டெபோரா டினிஸ் விப­ரிக்­கையில், இந்த வைரஸ் நோயால் வறிய மக்­களே பெரிதும் பாதிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் இந்தத் தரு­ணத்தில் பெண்கள் பலரும் கர்ப்­ப­ம­டை­வது குறித்து அச்­சத்தில் உள்­ள­தா­கவும் தெரி­வித்தார்.

கனடாவிலும் ஸிகா வைரஸ்

கனடாவில் ஸிகா வைரஸால் மூவர் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்தனர்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் இருவரும் அல்பேர்ட்டாவில் ஒருவரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு பயணத்தை மேற்கொண்ட வேளை தொற்றுக்குள்ளாகியுள்ளதாகவும் அந்நாட்டு சுகாதார அமைச்சின் பேச்சாளர் கூறினார். அவர்களில் கர்ப்பிணிகள் எவரும் இல்லை எனவும் அவர்கள் தற்போது நோயிலிருந்து குணமடைந்து வருவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தலைமுடி அடிப்படையிலான பாரபட்சங்களுக்கு தடை: பிரெஞ்சு...

2024-03-28 19:33:27
news-image

லாவோஸில் 54 பேருக்கு அந்த்ராக்ஸ் தொற்று:...

2024-03-28 16:11:44
news-image

சுவீடனில் குர்ஆனை எரித்தவர் நோர்வேயில் புகலிடம்...

2024-03-28 14:08:37
news-image

அமெரிக்காவில் கத்திக்குத்து தாக்குதலில் நால்வர் பலி...

2024-03-28 12:32:13
news-image

2 ஆவது சந்திர இரவை கடந்து...

2024-03-28 12:12:27
news-image

நான்கு வருடங்கள் இன்ஸ்டாவில் ஒன்றாக தோன்றி...

2024-03-28 12:02:59
news-image

காங்கிரஸ் கட்சியின் வங்கிக்கணக்கு முடக்கம் -...

2024-03-28 11:26:20
news-image

கொலம்பியாவில் 11 கோடியே 30 இலட்சம்...

2024-03-28 10:41:47
news-image

வான்வழி விநியோகத்தை நிறுத்துமாறு ஹமாஸ் கோரிக்கை:...

2024-03-27 18:56:33
news-image

ஜேர்மனியில் பேர்லின் - சூரிச் பஸ்...

2024-03-27 18:06:25
news-image

ஒரு பாலினத் திருமண சட்டமூலம் தாய்லாந்து...

2024-03-27 13:27:50
news-image

கடலுக்குள் விழுந்த உதவிப்பொருட்களை மீட்க முயன்ற...

2024-03-27 12:18:17