வங்கிக் கணக்குகளை முடக்கி சட்டவிரோதமாக குறித்து ஆராய்வதற்காக, தாய்வானின் ‘ஃபார் ஈஸ்டர்ன்’ வங்கி அதிகாரிகள் மற்றும் விசாரணை அதிகாரிகள் இருவரும் இலங்கை வந்துள்ளனர். இத்தகவலை பொலிஸ் வட்டாரம் உறுதி செய்துள்ளது.

இந்த மோசடி குறித்து ஏற்கனவே ‘லிட்ரோ கேஸ்’ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஷலீல முனசிங்க உட்பட இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். 

தாய்வானின் ஃபார் ஈஸ்டர்ன் வங்கியில் இருந்து சந்தேகத்துக்கு இடமான முறையில் 1.2 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை வங்கிக் கணக்கொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளது.

அந்தக் கணக்கில் இருந்து பணம் பெறப்பட்டதையடுத்து இலங்கை வங்கி அளித்த புகாரின் பேரிலேயே இந்த மோசடி தெரியவந்துள்ளது.

லிட்ரோ கேஸ் முன்னாள் தலைவர் ஷலீல, 2015ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன போட்டியிட்டு வெற்றி பெற்ற புதிய ஜனநாயக முன்னணி கட்சியின் தலைவர்களுள் ஒருவருமாவார் என்பது கவனிக்கத்தக்கது.

http://www.virakesari.lk/article/25598