இந்து சமுத்­தி­ரத்தின் பொரு­ளா­தார கேந்­திர நிலை­ய­மாக அபி­வி­ருத்­தி­ய­டையும் இலங்­கையின் இலக்கு முக்­கி­ய­மா­ன­தாகும் என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டத்தில் தெரி­வித்த பின்­லாந்து கைத்­தொழில் பெட­ரேஷன் பிர­தி­நி­திகள் முத­லீட்டு மற்றும் வர்த்­த­கத்­திற்கு நட்­பான சூழ­லொன்று தற்­போது இலங்­கையில் உரு­வாகி வரு­வ­தா­கவும் குறிப்­பிட்­டனர். 

பின்­லாந்தின் கைத்­தொழில் பெட­ரேஷன் அங்­கத்­த­வர்­க­ளுக்கும்  பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான குழுவி­ன­ருக்­கு­மி­டை­யி­லான சந்­திப்­பின்­போதே அவர்கள் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­தனர். 

ஹெல்­சின்கி நகர பின்­லாந்து கைத்­தொழில் பெட­ரேஷன் தலை­மை­ய­கத்தில் இடம்­பெற்ற இந்தக் கலந்­து­ரை­யா­டலில்,  ஆரம்­பத்தில் புதிய உலகின் பொரு­ளா­தார போக்­கு­க­ளுக்கு ஏற்­ற­வாறு பொரு­ளா­தார எண்­ணக்­க­ருக்­களை மாற்­றி­ய­மைத்த யுகம் உரு­வா­கி­யுள்­ளது.  பிராந்­திய சந்தை எண்­ணக்­கரு கால­ாவ­தி­ய­டைந்து உல­க­ளா­விய வர்த்­தக எண்­ணக்­கரு மேலோங்­கி­யுள்­ளது. அந்த யதார்த்­தத்­தினை அடிப்­ப­டை­யாகக் கொண்டு கைத்­தொழில் மற்றும் தொழில்­களை நடத்திச் செல்­வதன் தேவை­யுள்­ளது என பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெளிவு­ப­டுத்­தி­னார். 

அத­னை­ய­டுத்து வர்­சிலா நிறு­வ­னத்தின் பிரதி நிறை­வேற்றுத் தலைவர் கரி ஹிய­டனென், இந்து சமுத்­தி­ரத்தின் பொரு­ளா­தார கேந்­திர நிலை­ய­மாக அபி­வி­ருத்­தி­ய­டையும் இலங்­கையின் இலக்கு மிகவும் முக்­கி­ய­மா­ன­தாகும். சிறிய இரு நாடுகள் என்ற வகையில் பின்­லாந்தும் இலங்­கையும் இணை­யான பொரு­ளா­தார மற்றும் சமூக இலக்­கு­களில் கவனம் செலுத்­து­கின்­ற­மையால், இரு நாடு­க­ளுக்­கு­மி­டையே பொரு­ளா­தார மற்றும் சமூக உற­வு­களைப் பலப்­ப­டுத்தும் பொது அடிப்­ப­டை­யொன்று உரு­வா­கி­யுள்­ளது என்றார். 

இந்த சந்­திப்­புக்கு வருகை தந்­தி­ருந்த போடம், கார்­கோடெக்,  கொனெக்ரேன்ஸ், நொகியா, ஒடோடெக், வைசலா, வொட்­ஸலா மற்றும் அய்செய்  ஆகிய நிறு­வ­னங்­களின் பிர­தி­நி­தி­களும் இதன்­போது தமது கருத்­துக்­களைத் தெரி­வித்­தனர்.

குறிப்­பாக பின்­லாந்து மற்றும் அது சார்ந்த நாடு­களை மைய­மாகக் கொண்டு முன்­னணி தொழில் முயற்­சி­களை செயற்­ப­டுத்தும் பின்­லாந்து கைத்­தொழில் பெட­ரேஷன் இலங்­கையில் முத­லீடு மற்றும் வர்த்­தக வாய்ப்­புக்­க­ளுடன் அதி­க­ளவில் தொடர்­பு­ப­டு­வ­தற்கு விருப்­புடன் இருக்­கின்றோம். 

ஏற்­க­னவே இலங்­கையில் தொழில் முயற்­சி­களை செயற்­ப­டுத்தும் பெட­ரேஷன் அங்­கத்­த­வர்கள் முத­லீட்டு மற்றும் வர்த்­தக நட்­பான சூழ­லொன்று தற்­போது இலங்­கையில் உரு­வாகி வரு­கின்­றது என்­றனர். 

துறை­மு­கங்கள் மற்றும் கப்­பற்­துறை அமைச்சர் மஹிந்த சம­ர­சிங்க குறிப்­பி­டுகை யில்,  வர்த்­த­கத்­திற்­கான சிறந்த, பல­மான சூழலொன்று தற்போது இலங்கையில் உருவாகியுள்ளது. ஜனநாயகம், மனித உரி மைகள் மற்றும் நல்லாட்சியை அடிப்படை யாகக் கொண்ட இணக்கப்பாட்டு தேசிய அரசாங்கம் ஊடாக அரசியல் ஸ்திரத் தன்மை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எளிய வரி முறைமைகள் மற்றும் ஊக்குவிப் புக்கள் ஊடாக முதலீட்டாளர்களுக்கு சிறந்த வாய்ப்புக்கள் உருவாகியுள்ளது என்றார்.