அநு­ரா­த­பு­ரத்தில் உள்ள மூன்று தமிழ் அர­சியல்கைதி­களின் வழக்­குகள் மாற்­றப்­பட்­ட­மை­யா­னது சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் இன­வாத வெளிப்­பா­டாகும். அதனைக் கண்­டிக்கும் முக­மாக நாளை வெள்­ளிக்­கி­ழமை கொழும்பு கோட்டை புகை­யி­ரத நிலை­யத்­திற்கு முன்­பாக  பாரிய ஆர்ப்­பாட்டம் முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக அர­சியல் கைதி­களை விடு­தலை செய்­வ­தற்­கான தேசிய அமைப்பின் இணைப்­பாளர் அருட்­தந்தை மா.சக்­திவேல் தெரி­வித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

தங்­க­ளு­டைய வழக்­கு­களை அநு­ரா­த­புரம் நீதி­மன்­றத்­தி­லி­ருந்து மீண்டும் வவு­னியா நீதி­மன்­றத்­திற்கு சட்­ட­மா­திபர் திணைக்­களம் மாற்ற வேண்டும் என்னும் நியா­ய­மான கோரிக்­கையை முன்­வைத்து அநு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் உள்ள  மூன்று அர­சியல் கைதிகள்   உண்­ணா­வி­ரதப் போராட்­டத்­தினை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர். 

சட்­டமா அதிபர் திணைக்­களம் நியா­ய­மான கார­ண­மின்றி வவு­னி­யாவில் இருந்த வழக்­கினை அநு­ரா­த­புர நீதி­மன்­றத்­திற்கு மாற்­றி­ய­தற்கு இவர்கள் கூறும் காரணம் சாட்­சி­க­ளுக்கு பாது­காப்­பில்லை என்­ப­தாகும். ஆனால் இந்த கார­ணத்தை வவு­னி­யாவில் உள்ள பொலிஸ் திணைக்­க­ளத்­தையும் இரா­ணுவ படை­யையும் அவ­ம­திக்கும் ஒரு செய­லாக நாம்   கரு­து­கிறோம். இத­னூ­டாக சட்­டமா அதிபர் திணைக்­க­ளத்தின் இன­வா­தமே வெளிப்­படு­கி­றது.

குமா­ர­புரம்   கொலை குற்­ற­வா­ளி­க­ளான இரா­ணு­வத்­தி­ன­ருக்கு பாது­காப்பு இல்லை என  தெரி­வித்து  அவ்­வ­ழக்கு சிங்­கள பிர­தே­சத்­துக்கு மாற்­றப்­பட்­டது. அப்­போது அவ்­வ­ழக்கின் சாட்­சிகள் தமி­ழர்­க­ளாவர். ஆனால் அன்று சாட்­சி­க­ளுக்கு பாது­காப்­பில்லை என்று கூறி சட்­ட­மா­திபர் திணைக்­களம் எதுவும் செய்­ய­வில்லை. சாட்­சி­க­ளான தமி­ழர்கள் குறித்து அவர்கள் கவ­னத்தில் கொள்­ள­வில்லை. 

உண்­ணா­வி­ரத கைதி­களின் சாட்­சிகள் பெரும்­பான்­மை­யி­னத்தவர்  என்­பதால் அதனை காரணம் காட்டி வழக்­கினை அநு­ரா­த­பு­ரத்­துக்கு மாற்­று­வ­தா­னது  சட்­ட­மா­ அதிபர் திணைக்­க­ளத்தின் இன­வா­தத்தின் வெளிப்­பாடு என்­பது  தெளி­வா­கின்­றது.  இத்­த­கைய இன­வா­தத்­தி­னையா நல்­லாட்சி விரும்­பு­கின்­றது.

தமிழ் அர­சியல் கைதிகள் முகங்­கொடுக்கும் பிரச்­சி­னை­யா­னது யதார்த்­த­  மான நீதி நியாயம் தொடர்­பா­ன­தாகும். இந்­நி­லையில் தமி­ழர்­க­ளுக்கு ஒரு நியதி; சிங்­க­ள­வர்­க­ளுக்கு ஒரு நியதி என்­பதை ஏற்­றுக்­கொள்ள முடி­யாது. எனவே நல்­லாட்சி தலை­வ­ரான ஜனா­தி­பதி இந்த விட­யத்தில் உட­ன­டி­யாக தலை­யிட்டு நீதியை நிலை­நிறுத்­து­மாறு இந்த அமைப்பு கேட்­டுக்­கொள்­கி­றது.

மேலும் அர­சியல் கைதி­களின் நியா­ய­மான கோரிக்­கைக்கு ஆதரவு தெரிவித்தும் அனைத்து அரசியல் கைதிகளை நிபந்தனை இன்றி விடுவிக்கக்கோரியும் நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் அரசியல் கைதிகளுக்கான நீதியை விரும்பும் அனைவரும் கலந்து குரல் கொடுக்கு மாறு தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு அழைப்பு விடுக்கின்றது என்றார்.