அரசியல் கைதிகளின் பிரச்சினைக்கு தீர்வு காணாது ஜனாதிபதி யாழ்.வரக்கூடாது

Published By: Priyatharshan

12 Oct, 2017 | 11:27 AM
image

வித்­தியா கொலை வழக்கை கொலை அச்­சு­றுத்­த­லுக்கு மத்­தி ­யிலும் யாழ்.மேல் நீதி­மன்றில் விசா­ரணை செய்ய முடியும் என் றால், அர­சியல் கைதி­க­ளு­டைய வழக்­கு­களை ஏன் வவு­னியா நீதி­மன்றில் விசா­ரணை செய்ய முடி­யாது? என கேள்­வி­யெ­ழுப்­பி­யுள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்­ன­ணியின் பொதுசெய­லாளர் செல்­வ­ராஜா கஜேந்­திரன், நாளை நடை­பெ­ற­வுள்ள ஹர்த்­தா­லுக்கு அனைத்து தரப்­பி­னரும் ஒத்­து­ழைப்பு வழங்க வேண்டும் என்றும் அன்­றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் அலு­வ­லகம் முன்­பாக அனைத்து தரப்­பி­னரும் ஒன்று கூடவேண்டும் என்றும் அழைப்பு விடுத்­துள்ளார்.

யாழ். ஊடக அமை­யத்தில் நேற்று மதியம் நடை­பெற்ற பத்­தி­ரி­கை­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். 

அவர் மேலும் தெரி­விக்­கையில்,

அனு­ரா­த­புரம் சிறைச்­சா­லையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்ள அர­சியல் கைதி­க­ளான ம.சுலக்சன், க.தர்சன் இ.திரு­வருள் ஆகி­யோரின் வழக்­குகள் வவு­னியா நீதி­மன்­றி­லி­ருந்து அனு­ரா­த­புரம் நீதி­மன்­றுக்கு உரிய கார­ணங்­க­ளின்றி மாற்­றப்­பட்­டுள்­ளன. இதனால் அர­சியல் கைதி­களும் அவர்­க­ளது குடும்­பத்­தி­னரும் பெரும் பாதிப்­புக்கு உள்­ளா­கி­யுள்­ளனர். இந்த வழக்கு விசா­ர­ணை­களை மறு­ப­டியும் வவு­னியா மேல் நீதி­மன்­றுக்கு மாற்ற கோரி கடந்த 16 நாட்­க­ளாக உண்­ணா­வி­ரத போராட்­டத்தில் அவர்கள் ஈடு­பட்டு வரு­கின்­றனர்.

இவ்­வாறு உண்­ணா­வி­ரதம் இருப்­ப­வர்­களின் உடல் நிலை மிக மோச­மான நிலைக்கு சென்­றுள்­ளன. கைதி­களின் உடல் நிலை ஆபத்­தான நிலைக்கு சென்ற பின்­னரும் கூட மனி­த­நே­ய­மற்ற முறையில். சிறைச்­சாலை திணைக்­கள அதி­கா­ரிகள் செயற்­பட்டு வரு­கின்­றனர். தமி­ழர்கள் தானே உயி­ர­ழந்து போகட்டும் என்ற நிலையில் தான் அவர்கள் இருப்­ப­தாக தோன்­று­கின்­றது. முன்னாள் அமைச்சர் விமல் வீர­வன்ச உண்­ணா­வி­ரதம் இருந்த போது அவ­ரது கோரிக்­கைகள் எதோ ஒரு வகையில் நிறை­வேற்­றப்­பட்டு உண்­ணா­வி­ரதம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டது.

ஆனால் குற்­றங்கள் எது­வுமே செய்­யாத அல்­லது தமக்கு மக்­க­ளுக்­காக சில­வற்றை செய்த இந்த அப்­பா­வி­க­ளு­டைய கோரிக்­கை­களை இந்த அர­சாங்கம் கண்டும் காணா­தது போல் இருந்து வரு­கின்­றது. உண்­ணா­வி­ரதம் இருக்­கின்ற அர­சியல் கைதி­க­ளு­டைய குடும்­பங்­களும் மிக மோச­மான நிலையில் மன­த­ளவில் பாதிப்பை எதிர்­நோக்­கி­யுள்­ளனர். அவர்­க­ளது பிள்­ளைகள் சிறை­களில் உணவு உண்­ணாமல் இருக்க அவர்­க­ளது தாய்­மார்­களும் உற­வு­களும் உணவை தவிர்த்தே வரு­கின்­றனர். இதனால் அவர்­க­ளு­டைய குடும்­பங்­களும் பாதிப்பை எதிர்­நோக்கி வரு­கின்­றன.

சாட்­சி­க­ளுக்கு பாது­காப்பு அச்­சு­றுத்தல் என கூறு­கின்­றார்கள். ஆனால் யுத்தம் முடிந்­து­விட்­டது பாது­காப்பு அச்­சு­றுத்தல் இல்லை என இதே அர­சாங்கம் தான் பிரச்­சாரம் செய்தும் வரு­கின்­றது. ஏன் பாது­காப்பு அச்­சு­றுத்தல். யாரால் பாது­காப்பு அச்­சு­றுத்தல் என்­ப­தனை சட்­டமா அதிபர் திணைகள் வெளிப்­ப­டுத்த வேண்டும். வித்­தியா கொலை வழக்கின் போது விசா­ர­ணையில் ஈடு­பட்ட நீதி­பதி இளஞ்­செ­ழியன் மீதும் துப்­பாக்கி பிர­யோகம் மேற்­கொள்­ளப்­பட்டு கொலை அச்­சு­றுத்தல் விடுக்­கப்­பட்­டி­ருந்­தது. எனினும் அவர் கொழும்­புக்கு செல்­ல­வில்லை. வழக்கும் வேறு இடங்­க­ளுக்கு மாற்­றப்­ப­ட­வில்லை. அதே போல் இந்த கைதிகள் விட­யத்தில் ஏன் செய்ய முடி­யாது. இலங்­கையின் நீதி­மன்­றங்கள் மீது எமக்கு நம்­பிக்கை இல்லை என்­றாலும். அவர்­க­ளது வழக்கு விசா­ரணை மீளவும் வவு­னியா நீதி­மன்றில் நடை­பெற வேண்டும்.

தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சுமந்­தி­ர­னுக்கு அச்­சு­றுத்தல் என கூறி அவர் செல்லும் இடங்­க­ளுக்கு எல்லாம் பாது­காப்பு வழங்க முடியும் என்றால் அர­சியல் கைதி­களின் வழக்கின் சாட்­சி­யா­ளர்­க­ளுக்கு ஏன் பாது­காப்பு வழங்க முடி­யாது?

அர­சியல் கைதி­க­ளுக்கு தண்­டனை வழங்க வேண்டும் என்ற வெறி­யோடு தான் சட்­டமா அதிபர் திணைக்­களம் செயற்­பட்டு வரு­கின்­றது. இதற்­காக தான் அவர்­க­ளது வழக்கு விசா­ர­ணை­களை அனு­ரா­த­புரம் நீதி­மன்­றுக்கு சட்­டமா அதிபர் திணைக்­களம் மாற்­றி­யுள்­ளது. இவர்­களின் நியா­ய­மான கோரிக்கை தொடர்பில் ஆக்­க­பூர்­வ­மான முடி­வெ­டுத்து அவர்­க­ளது வழக்­கு­களை உட­ன­டி­யாக வவு­னியா நீதி­மன்­றுக்கு மீண்டும் மாற்­று­மாறும் அது தொடர்­பான அறி­வித்­தலை அவ் அர­சியல் கைதிகள் மூவ­ருக்கும் உட­ன­டி­யாக அறி­விக்­கு­மாறும் வேண்­டு­கோள்­வி­டுக்­கின்றோம்.

மேலும் அனைத்து அர­சியல் கைதிகள் தொடர்­பா­கவும் அரசு அர­சியல் தீர்­மானம் எடுத்து நிபந்­த­னை­யின்றி விடு­தலை செய்­யு­மாறும் கோரிக்கை விடுக்­கின்றோம். இம்­மாதம் 14 ஆம் திகதி யாழ்ப்­பாணம் வருகை தரும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன எதிர்­வரும் மூன்று தினங்­க­ளுக்குள் அர­சியல் கைதி­க­ளது கோரிக்­கைகள் தொடர்பில் நியா­ய­மான தீர்­வொன்றை பெற்­றுத்­தர வேண்டும். அவ்­வாறு அர­சியல் கைதி­க­ளு­டைய பிரச்­ச­னை­க­ளுக்கு தீர்வை காணாமல் ஜனா­தி­பதி யாழ்ப்­பா­ணத்­திற்கு வர முடி­யாது. இம்­மாதம் 13 ஆம் திகதி வடக்கு மாகாணம் தழு­விய ஹர்த்தால் நடை­பெ­ற­வுள்­ளது. அதற்கு அனைத்து தரப்­பி­னரும் ஆத­ரவு தர வேண்டும். அன்­றைய தினம் வடக்கு மாகாண ஆளுநர் அலு­வ­லகம் முற்­று­கை­யி­டப்­ப­ட­வுள்­ளதால் அனை­வரும் ஆளுநர் அலுவலகம் முன்பாக ஒன்று கூடுமாறு கேட்டு கொள்கின்றோம்.

ஆகவே ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தருவதற்கு முன்னர் அரசியல் கைதிகள் பிரச்சினைக்கு தீர்வு ஒன்றை தர வேண்டும். அவ்வாறு தீர்வை முன்வைக்காமல் ஜனாதிபதி யாழ்ப்பாணம் வருகை தந்தால் அவருக்கு எதிராக போராடுவோம். அரசியல் கைதிகள் பிரச்சனை அவர்களுடைய குடும்ப பிரச்சனை அல்ல. தமிழ் மக்களுடைய விடிவுக்காக போராடியதாலேயே அவர்கள் சிறையில் உள்ளார்கள். எனவே இதனை உணர்ந்து ஒவ்வொரு தமிழ் மகனும் போராட முன்வர வேண்டும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01