அவுஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது இ20 போட்டியில், இந்திய அணித் தலைவர் விராட் கோலி ஓட்டம் எதையும் பெறாமல் ஆட்டமிழந்தார். இதன் அடிப்படையில் அவர் புதிய சாதனை (!) ஒன்றைப் படைத்தார்.

அதாவது, இதுவரை அதிக எண்ணிக்கையிலான இ20 போட்டிகளில் விளையாடிய பின் முதன்முறையாக ‘முட்டை’ வாங்கிய வீரர் என்ற சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.

இதுவரை 46 இ20 போட்டிகளில் விளையாடியுள்ள கோலி, முதன்முறையாக நேற்று நடைபெற்ற 47வது போட்டியில் முதன்முறையாக ஓட்டம் எதையும் பெறாமல் ஆட்டமிழந்துள்ளார்.

இதற்கு முன் இந்தச் சாதனைக்கு பாகிஸ்தானின் சொஹைப் மாலிக்கே சொந்தக்காரராக இருந்தார். இவர், தான் விளையாடிய நாற்பதாவது போட்டியில்தான் முதன்முறையாக ஓட்டம் பெறாமலேயே ஆட்டமிழந்துள்ளார்.

மேலும், இந்திய அணி இதுவரை விளையாடியுள்ள 85 இ20 போட்டிகளில், முதன்முறையாக அணித் தலைவர் ஓட்டம் பெறாமல் ஆட்டமிழந்த முதல் சந்தர்ப்பமும் இதுவே!