பரீட்சையை முன்னிட்டு வீட்டில் கொடுக்கப்பட்ட அதீத அழுத்தத்தைத் தாங்கிக்கொள்ள முடியாத மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் காலியில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

காலி, பொத்தல பகுதியைச் சேர்ந்த க.பொ.த. சாதாரண தர மாணவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டவராவார்.

காலியின் பிரதான பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுவந்த இந்த மாணவர், நேற்று (10) மாலை தனது தந்தைக்குச் சொந்தமான அனுமதிபெற்ற துப்பாக்கியால் தலையில் சுட்டுக் கொண்டார்.

கடும் காயங்களுக்குள்ளான மாணவன், உடனடியாக காலி, கராப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோதும் சிகிச்சை பலனளிக்காது மரணமானார்.

குறித்த மாணவரின் தந்தை ஒரு வர்த்தகரும், தாய் ஒரு ஆசிரியையும் ஆவர். தற்கொலைக்குக் காரணம், பரீட்சையை முன்னிட்டு படிக்குமாறு வீட்டில் கொடுக்கப்பட்ட அழுத்தமே என பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.