மருத்துவப் பீட மாணவர் செயற்பாட்டுக்குக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை எதிர்வரும் 20ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்தை நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு இன்று மாளிகாகந்தை பிரதான நீதவான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இவ்வுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.