உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றுடன் கலன்பிந்துனுவெவ பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இரு சந்தேக நபர்களையும்  எதிர் வரும் 22ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதிமன்ற  நீதவான் ஹர்ஷன கெகுவள உத்தரவிட்டுள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இருவரும் கலன்பிந்துனுவெவ நாவக்குளம் மற்றும் வெலான உபுள்தெனிய பகுதிகளைச் சேர்ந்தவர்களான   கலன்பிந்துனுவெவ பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவினர் மோட்டார் சைக்கிலொன்றில் பயணித்த மூவரை சோதனைக்குற்படுத்திய போது உள்ளூரில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியொன்றும் மூன்று ரவைகளும் அவர்களிடமிருந்து மீட்கப்பட்தோடு சோதணைக்குற்படுத்திய போது ஒருவர் தப்பிச்சென்றுள்ளார்.

அவரை கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ஏதாவது ஒரு குற்றச்செயலை செய்வதற்கு சென்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கலன்பிந்துனுவெவ பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் பொன்சேகா முன்னெடுத்துள்ளார்.