இலங்கையினுள் பாலியல் தொழிலாளர்கள் மற்றும் ஓரினச்சேர்க்கையாளர்கள் தொடர்பான புள்ளிவிபர கணிப்பீடொன்றை முன்னெடுக்க தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு நடவடிக்கை எடுத்துள்ளது.

2014ஆம் ஆண்டு வரை மேற்கொள்ளப்பட்ட கருத்து கணிப்பின் படி பாலியல் தொழிலாளர்கள் 15,000 த்தையும் ஓரினச்சேர்க்கையாளர்கள் 10,000 த்தையும் நெருங்கி இருந்ததாக குறித்த அமைப்பு தெரிவிக்கிறது.

எச்.ஐ.வி எய்ட்ஸ் நோய் தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மேற்கொள்ளும் போது மேற்கூறிய விடயங்களில் புதிய கருத்து கணிப்பீட்டின் அவசியம் ஏற்பட்டமையால் குறித்த நடவடிக்கையை திட்டமிட்டுள்ளதாக இவ் அமைப்பு தெரிவிக்கிறது.

மேலும் ஐந்து வருட பாலியல் நோய் தடுப்பு விழிப்புணர்வு திட்டத்திற்காக பாரியளவு நிதியை ஒதுக்கீடு செய்துள்ளதாக இவ் அமைப்பு தெரிவிக்கிறது.