‘இதய நோய்களுக்கு இதயத்தினை திறந்து மேற்கொள்ளப்படும் பை பாஸ் சத்திர சிகிச்சை தான் சிறந்த தீர்வு என்பது மக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இதய பாதிப்புகளுக்கு பை பாஸ் சர்ஜேரி சிறந்த தீர்வாக இருந்தாலும், பலூன் மூலம் இதய இரத்த குழாய்களில் ஏற்படும் அடைபுகளை நீக்க மேற்கொள்ளப்படும் ஓஞ்சியோபிளாஸ்ரி சத்திர சிகிச்சைகளும் சிறந்த பலனை அளித்து வருகின்றன. இதய பாதிப்புகளுக்கு எந்த வகையினதான சிகிச்சை என்பதைக் காட்டிலும், சிகிச்சையின் பலன்கள் நன்றாக இருக்கின்றனவா என்பதே முக்கியம்.

எம்முடைய மருத்துவ அனுபவத்தில் ஒருவருக்கு இதயத்திலுள்ள மூன்று இரத்த குழாய்களிலும் அடைப்பு ஏற்பட்டது. பல்வேறு கட்ட பரிசோதனை முடிவுகளுக்கு பிறகு அவருக்கு பலூன் ஓஞ்சியோபிளாஸ்ரி சத்திர சிகிச்சை தான் அளிக்கப்பட்டது. அவர் குணமாகி இன்று வரை பலூன் ஓஞ்சியோபிளாஸ்திரி சத்திர சிகிச்சையின் அறிவிக்கப்படாத விளம்பர தூதுவராக செயல்பட்டு, மக்களிடத்தில் இந்த சிகிச்சை முறை குறித்த விழிப்புணர்வை மேற்கொண்டு வருகிறார்.

அதே போல் இதய நோய்களுக்கு இதயத்தை துளைக்காமல் மேற்கொள்ளப்படும் நுண் துளை சத்திர சிகிச்சைக்கும் தற்போது ஆதரவும், வரவேற்பும் அதிகரித்து வருகிறது. அதே போல் உலகத்திலேயே அதிகளவிலான பை பாஸ் சர்ஜேரி மேற்கொள்ளப்படும் நாடாக இந்தியா திகழ்கிறது.’ என்கிறார் டொக்டர் கோபால் முருகன். இவர் சென்னையில் செயல்பட்டு வரும் சிம்ஸ் மருத்துவமனையில் இதயத்துறையின் சத்திர சிகிச்சை நிபுணராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொகுப்பு அனுஷா.

தகவல் : சென்னை அலுவலகம்