குற்ற விசாரணைப் பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த லிட்ரோ  காஸ் சமையல் எரிவாயு நிறுவனத் தலைவர் சாலீல முனசிங்கவுக்கு எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

விளக்கமறியல் நீடிப்பு உத்தரவை கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

தாய்வான் வங்கியிலிருந்து 1.1 மில்லியன் டொலர் பணம் காணாமல் போனமை தொடர்பாக லிட்ரோ சமையல் எரிவாயு நிறுவனத் தலைவர் என்.எம்.எஸ் முணசிங்கவை குற்ற விசாரணைப் பிரிவினர் கைது நேற்று நீதிமன்றத்தில் ஆஜர் செய்திருந்த நிலையில் அவரை இன்று வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலதிக விபரங்களுக்கு 

தாய்வான் வங்கி கொள்ளை : லிட்ரோ உரிமையாளர் கைது

http://www.virakesari.lk/article/25542

லிட்ரோ நிறுவனத் தலைவருக்கு விளக்கமறியல்

http://www.virakesari.lk/article/25557