அ.தி.மு.க. பொதுச்­செ­ய­லாளர் சசி­க­லாவின் பரோல் இன்று மாலை­யுடன்  முடி­வ­டை­கின்­றது. இதனால் அவர் மீண்டும் சிறைக்கு செல்லவுள்ளார். 

கடந்த பெப்­ர­வரி மாதம் 15ஆம் திகதி சொத்­துக்­கு­விப்பு வழக்கில் தண்­டனை பெற்று பெங்­க­ளூரு பரப்­பன அக்­ர­ஹார சிறையில் அடைக்­கப்­பட்ட சசி­கலா உடல்நிலை ­பா­திக்­கப்­பட்­டுள்ள தனது கணவர் நட­ரா­ஜனை பார்ப்­ப­தற்­காக தற்­போது 5 நாட்கள் பரோலில் வந்­துள்ளார்.

சிறையிலிருந்து பரோலில் வந்த சசி­கலா மருத்­து­வ­ம­னைக்கு சென்று வந்த நேரம் தவிர மீதி நேரங்­களில் கட்­சியில் உள்ள குள­று­ப­டி­களை தீர்ப்­பது குறித்தும் சொத்­துக்கள் குறித்தும் ஆலோ­ச­னையில் ஈடு­பட்­டுள்ளார்.

இள­வ­ர­சியின் மகள் கிருஷ்­ண­பி­ரி­யாவின் வீட்டில் தங்­கி­யி­ருக்கும் அவர், கட்­சியில் நிலவும் குள­று­ப­டி­க­ளுக்கு தீர்வு காண்­பது குறித்தும் சொத்­துக்கள் குறித்தும் உற­வினர்களிடம் ஆலோ­ச­னையில் ஈடு­பட்­டுள்ளார்.

சசி­க­லாவின் பரோல் இன்று மாலை­யுடன் முடி­வ­டை­வ­தை­ய­டுத்து அவர் மீண்டும் சிறைக்குச் செல்ல இருக்­கிறார். அதற்குள் பிரச்சினைகள் குறித்து அவர் தீர்வெடுக்க முயற்சித்துள்ளதாக கூறப்படுகின்றது.