வார்த்தைகளால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் ஆண்களோடு செல்பி

Published By: Robert

11 Oct, 2017 | 10:07 AM
image

மாணவி ஒருவர் தன்னை வார்த்தைக ளால் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தும் ஆண்களோடு செல்பி எடுத்து அதனை சமூகவலைத்தளங்களில்  வெளியிட்டு பிர பலமடைந்துள்ளார். தன்னை வார்த்­தை­க ளால் பாலியல் வன்­மு­றைக்கு உட்­ப­டுத் தும் ஆண்­க­ளோடு செல்பி எடுத்துக்கொள்­கிறார்... ஏன் தெரி­யுமா?

ஆம்ஸ்­டர்­டாமில் நோவா ஜான்ஸ்மா என் னும் இரு­பது வயது மாணவியே இவ் வாறு  சாலையில் செல்லும் போது தன்னை வார்த்­தை­களால் பாலியல் வன்­மு­றைக்கு உட்­ப­டுத்தும் ஆண்­க­ளுடன் செல்பி எடுத்து ஒரு மாத காலமாக அந்த படங்­களை சமூக தளங்­களில் பகிர்ந்து வரு­கிறார். 

பாலியல் உற­விற்கு அழைப்­பது, ஊ ஊ என ஓநாய் போல கத்­து­வது, திடீ­ரென நடந்து செல்லும் போது குறுக்கே வந்து பாதையை மறைப்­பது என பல வகையில் ஆண்கள் தனக்கு பாலியல் வன்­கொ­டு­மைகள் செய்­துள்­ள­தாக நோவா ஜான்ஸ்மா கூறி­யுள்ளார். அவர்கள் இப்­படி செய்யும் போது அதற்கு எப்­படி பதில் அளிப்­பது, என்ன செய்ய வேண்டும் என்று அறி­யா­நி­லையில் இருந்­துள்ளார் நோவா ஜான்ஸ்மா. ஏதா­வது திருப்பி பேசினால் பிரச்­சினை பெரி­தா­கி­வி­டுமோ என்ற அச்­சமும் நோவா ஜான்ஸ்­மா­விடம் இருந்­துள்­ளது. எப்­படி கண்­டு­கொள்­ளாமல் இருப்­பது... ஆண்கள் காலம் கால­மாக இதை செய்து கொண்­டி­ருக்­கி­றார்கள். அவர்கள் பாட்­டுக்கு போகும் வழியில் இதை வெகு இயல்­பாக செய்­கி­றார்கள். இதை எப்­படிக் கண்­டு­கொள்­ளாமல் இருப்­பது என எண்­ணிய நோவா ஜான்ஸ்மா ஒரு திட்டம் தீட்­டினார். ஒரு நாளில் எத்­தனை பேராக இருந்­தாலும், தன்னை சாலையில் செல்லும் போது வார்த்­தை­களால் பாலியல் வன்­மு­றைக்கு உட்­ப­டுத்தும் ஆண்­க­ளிடம் நேர­டி­யாக ஒரு செல்பி எடுத்துக்கொள்­ள­லாமா என கேட்க தொடங்­கினார். 

இப்­படி நோவா ஜான்ஸ்மா ஆண்­க­ளி டம் செல்பி எடுத்துக்கொள்­ள­லாமா என கேட்கும் போது அவர்­க­ள் பெரு­மை­யாக உணர்­வதை கண்­ட­தாக நோவா ஜான்ஸ்மா கூறி­யுள்ளார். நோவா ஜான்ஸ்மா மட்­டு­மின்றி, இவ­ருடன் இவ­ரது தோழியும் சேர்ந்து இப்­படி செல்பி எடுப்­பதை கடந்த ஒரு மாத­மாக வழக்­க­மாக கொண்­டி­ருக்­கி­றார்கள். ஏன்? இது­வரை இவர்கள் பல செல்பிக்கள் இப்­படி எடுத்­தி­ருந்­தாலும், ஒரே ஒரு­வரை தவிர வேறு யாரும் தங்­க­ளிடம் ஏன் இப்­படி செல்பி எடுக்­கி­றீர்கள் என கேட்­டதே இல்லை. கேள்வி கேட்ட அந்த ஒரு நபரும் செல்பி எடுத்துக் கொண்டார் என நோவா ஜான்ஸ்மா கூறு­கிறார். எதற்­காக இப்­படி படம் எடுக்­கிறாய் என கேள்வி கேட்கும் நண்­பர்­க­ளுக்கும் நோவா ஜான்ஸ்­மா­ எந்த கார­ணமும் கூறு­வ­தில்லை. பெண்கள் என்ன ஏலி­யன்­களா? நம்­முடன் சரி பாதி­யாக வீட்டில், உறவில், சமூ­கத்தில் இணைந்­தி­ருக்கும் பெண்­களை நாம் உண்­மையில் மதிக்­கி­றோமா? என்ற கேள்­விக்­கான பதில்கள்தான் இந்த செல்பி புகைப்­ப­டங்கள். இது எந்த ஒரு ஆணையும் அவ­மா­னப்­ப­டுத்த நான் செய்­ய­வில்லை. ஒரு­வேளை அவர்கள் எனது இன்ஸ்­டா­கிராம் பதிவில் இருந்து அவரது படத்தை நீக்க கூறினால், நாம் நீக்கி விடுவேன். என்னால் ஒருவரது வாழ்க்கை அழிய நான் காரணமாக இருக்க விரும்பவில்லை என்கிறார் நோவா ஜான்ஸ்மா.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right