உலகின் முதல் ஸ்மார்ட் பொலிஸ் நிலையம் டுபாயில் செயற்­பாட்­டுக்கு வந்­துள்­ளது. பொலி­ஸாரே இல்­லாமல் முற்­றிலும் இணைய வழியில் இயங்­கக்­கூ­டிய இந்த பொலிஸ் நிலை­யத்­துக்கு ‘எஸ்.பி.எஸ்.’ (ஸ்மார்ட்  பொலிஸ்  ஸ்டேஷன்) என பெயர் சூட்­டப்­பட்­டுள்­ளது. இந்த பொலிஸ் நிலை­யத்தில் புகார் அளித்தல், போக்­கு­வ­ரத்து அப­ராதம் செலுத்­துதல், விபத்து குறித்து பதிவு செய்தல், தேவை­யான ஆவ­ணங்கள் பெறுதல் உள்­ளிட்ட 60 சேவை­களை பெற்­றுக்­கொள்­ளலாம்.

ஸ்மார்ட்  பொலிஸ்  நிலை­யத்­துக்கு வரும் மக்­களின் உத­விக்­காக தற்­போது அங்கு 2  பொலிஸார் பணி­ய­மர்த்­தப்­பட்­டுள்­ளனர். மக்கள் முழு­மை­யாக  இந்த சேவையை பயன்­ப­டுத்த தெரிந்­து­கொண்ட பின் 2  பொலி­ஸாரும் அங்­கி­ருந்து திரும்­பப்­பெ­றப்­ப­டு­வார்கள்.  

ஸ்மார்ட்  பொலிஸ்  நிலை­யத்தின் முகப்பு அறையில் வைக்­கப்­பட்­டி­ருக்கும் இயந்­தி­ரத்தில், தாங்கள் எந்த சேவையை பெற வந்­தி­ருக்­கி­றார்­களோ அதற்­கான டோக்­கனை பெற்­றுக்­கொள்­ளலாம். பின்னர் காத்­தி­ருப்பு அறையில் இருந்து காணொ­ளிக்­காட்சி மூலம்  பொலிஸ்  அதிகாரியை தொடர்பு கொண்டு தங்களுடைய புகாரை பதிவு செய்யலாம்.