வர­லாற்றில் முதன்­மு­றை­யாக உலகக் கிண்ணக் கால்­பந்­தாட்டத் தொட­ருக்கு தகு­தி­பெற்று சாதனை படைத்­துள்­ளது ஐஸ்­லாந்து.

ரஷ்­யாவில் 21ஆவது பிபா உலகக் கிண்ணக் கால்­பந்­தாட்டப் போட்டித் தொடர் எதிர்­வரும் 2018ஆம் ஆண்டு நடை­பெ­ற­வுள்­ளது. இதன் ஐரோப்­பிய அணி­க­ளுக்­கான தகுதிச் சுற்றில் பிரான்ஸ், ஹங்­கேரி, பெல்­ஜியம் உட்­பட 54 நாடுகள் 9 பிரி­வு­க­ளாக லீக் சுற்றில் விளை­யா­டு­கின்­றன. ஒவ்­வொரு பிரி­விலும் முத­லிடம் பிடிக்கும் அணி நேர­டி­யாக உலகக் கிண்­ணத்­திற்கு தகு­தி­பெறும்.

இதன் 'ஐ' பிரிவு லீக் போட்­டியில் ஐஸ்­லாந்து – கொசோவா அணிகள் மோதின. இந்தப் போட்­டியில் ஐஸ்­லாந்து அணி 2–0 என்ற கோல்கள் அடிப்­ப­டையில் வெற்­றி­பெற்று வர­லாற்றில் முதன்­மு­றை­யாக கால்பந்தாட்ட உலகக் கிண்ணத்திற்கு தகுதிபெற்றது.