தங்­கப்­பந்து என்று அழைக்கப்­படும் ‘பலோன் டி’ஆர்’ விரு­திற்­காக மெஸ்ஸி, ரொனால்டோ, நெய்மர் உட்­பட 30 பேர் கொண்ட பரிந்­துரைப் பட்­டியல் வெளி­யி­டப்­பட்­டுள்­ளது.

சிறப்­பாக விளை­யாடும் கால்­பந்து வீர­ருக்கு, பிரான்ஸ் கால்­பந்து மேகசின் சார்பில் ஆண்­டு­தோறும் பிபா தங்­கப்­பந்து என்­ற­ழைக்­கப்­படும் ‘பலோன் டி'ஆர்’ விருது வழங்­கப்­படும். 

இந்த விரு­துக்­கான வீரர் பத்­தி­ரி­கை­யா­ளர்கள் குழுவால் தெரிவு செய்­யப்­ப­டுவார். இந்த வரு­டத்­திற்­கான 30 பேர் கொண்ட பரிந்­துரைப் பட்­டி­யலில் மெஸ்ஸி, கிறிஸ்­டி­யானோ ரொனால்டோ, நெய்மர் ஆகியோர்  இடம்­பி­டித்­துள்­ளனர்.மெஸ்ஸி 5 முறை இந்த விருதை வென்­றுள்ளார். ரொனால்டோ 4 முறை இந்த விருதை வென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.