ரவி வசித்த வீட்­டுக்கு அலோ­சியஸ் வாடகை செலுத்­தி­ய­தாக ஆணைக்­குழு சாட்­சியப் பதி­வின்­போதே அறிந்தேன்

Published By: Robert

11 Oct, 2017 | 12:01 PM
image

முன்னாள் நிதி அமைச்சர் ரவி கருணா­நா­யக்க, வசித்த வீட்­டுக்கு தனது மரு­மகன் அர்ஜுன் அலோ­சியஸ் வாடகை செலுத்­தி­ய­தாக கூறப்­படும் விட­யத்தை தான் முதன் முதலில் ஆணைக்குழு சாட்சிப் பதிவின் இடை நடு­வி­லேயே கேள்­வி­யுற்­ற­தா­கவும் அது தொடர்பில் தனக்கு எதுவும் தெரி­யாது எனவும் மத்­திய வங்­கியின் முன்னாள் ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன் நேற்று சாட்­சி­ய­ம­ளித்தார்.

பிணை முறி மோசடி தொடர்­பி­லான ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக்குழுவில்  நேற்று எட்­டா­வது  நாளாக முன்னாள் மத்­திய வங்கி ஆளுநர் அர்­ஜுன மகேந்­திரன்  சாட்­சி­ய­ம­ளிக்கும் போதே அவர் இதனைத் வெளிப்­ப­டுத்­தினார்.

ஆணைக்குழுவின் உறுப்­பி­னர்­க­ளான உயர் நீதி­மன்ற நீதி­யரசர் கே.டி.சித்­ர­சி­றியின் தலை­மையில்  நீதி­ய­ரசர் பிர­சன்ன ஜய­வர்­தன மற்றும் ஓய்­வு­பெற்ற பிரதி கணக்­காய்­வாளர் நாயகம் வேலுப்­பிள்ளை கந்­த­சாமி ஆகியோர் முன்­னி­லையில், சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின்  சிரேஷ்ட மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் தப்­புல டி லிவேரா, அர்­ஜுன மகேந்­தி­ரனை குறுக்கு விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தினார்.

குறிப்­பாக, பிணை முறி ஏலத்­துக்கு முன்னர் அரச வங்­கி­களின் பிர­தா­னி­க­ளுடன் அமைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க நடத்­தி­ய­தாக கூறப்­படும் கலந்­து­ரை­யாடல், அதன்­போது அரச வங்­கி­க­ளுக்கு வழங்­கப்­பட்ட உத்­த­ர­வுகள் குறித்து இதன்­போது சிரேஷ்ட மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் தப்­புல டி லிவேரா அர்ஜுன மகேந்­தி­ர­னிடம் கேள்வி எழுப்­பினார்.

இதற்கு பதி­ல­ளித்த அர்­ஜுன மகேந்­தி ரன், அவ்­வா­றான கலந்­து­ரை­யா­டல்கள் தொடர்பில் தனக்கு எது வும் தெரி­யாது எனவும் மத்­திய வங்கி உறுப்­பி­னர்கள் எவரும் அதில் பங்­கேற்­க­வில்லை எனவும் குறிப்­பிட்டார்.

அர­சுக்கு தேவை­யான நிதியைப் பெற்­றுக்கொள்ள, வழ­மை­யாக கையா­ளப்­படும் நேரடி வைப்பு முறையை நிறுத்த பிர­தமர் ரணில் விக்­ர­ம­சிங்க 2015 பெப்­ர­வரி மாதம் 24 ஆம் திகதி இடம்­பெற்ற அமைச்­ச­ரவை உப குழு கூட்­டத்தில் தமக்கு ஆலோ­சனை வழங்­கி­ய­தாக அர்­ஜுன மகேந்­திரன் ஏற்­க­னவே வழங்­கிய சாட்­சி­யத்தை சுட்­டிக்­காட்டி, பிர­த­மரின் கோரிக்­கைக்கு அமை­வா­கவா நேரடி வைப்பு முறை­மையை தவிர்த்தீர் என இதன்­போது சிரேஷ்ட மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் தப்­புல டி லிவேரா, கேள்வி எழுப்­பினார்.

எனினும் அது மட்டும் கார­ண­மல்ல என பதி­ல­ளித்த அர்­ஜுன மகேந்­திரன் அப்போ­தைய கள நில­வ­ரத்­தையும் ஆராய்ந்­த­தாக சுட்­டிக்­காட்­டினார்.

இதன்­போதே, அர்ஜுன் அலோ­சியஸ் அப் ­போ­தைய நிதி­ய­மைச்சர் ரவி கரு­ணா­நா­யக்க வசித்த வீட்­டுக்கு வாடகை செலுத்­தி­யதை தாங்கள் அறிந்­தி­ருந்­தீர்­களா என சிரேஷ்ட மேல­திக சொலி­சிட்டர் ஜெனரல் தப்­புல டி லிவேரா, அர்­ஜுன மகேந்­தி­ர­னிடம் கேள்வி எழுப்­பினார்.

அது தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாது எனவும் ஆணைக்குழுவின் சாட்சிப் பதி வுகளின் இடைநடுவே அது தொடர்பில் தான் முதன் முதலாக கேள்வியுற்றதாகவும் அர்ஜுன மகேந்திரன் பதிலளித்தார். இன்று காலை 10 மணிக்கு ஆணைக்குழுவின் சாட்சிப் பதிவுகள் இடம்பெறவுள்ளன. 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-04-18 06:04:36
news-image

ஹிருணிகாவுக்கு அழைப்பாணை

2024-04-18 02:38:02
news-image

நான் இருக்கும் வரை சுதந்திர கட்சியை...

2024-04-18 00:54:03
news-image

கம்பனிகளை விரட்டியடிக்கும் போராட்டத்தில் தொழிற்சங்கங்கள் கைகோர்க்க...

2024-04-17 19:38:40
news-image

மீண்டும் சிஐடிக்கு அழைக்கப்பட்டுள்ள அருட்தந்தை சிறில்...

2024-04-17 22:43:47
news-image

ஓமான் வளைகுடா கடலில் கவிழ்ந்த கப்பலிலிருந்த...

2024-04-17 21:14:27
news-image

கட்டுநாயக்க - துபாய் விமான சேவைகள்...

2024-04-17 20:54:47
news-image

யாழில் மனைவியைக் கூரிய ஆயுதத்தால் தாக்கிய...

2024-04-17 20:49:10
news-image

கல்முனை வடக்கு விவகாரம் : நிர்வாக...

2024-04-17 20:06:01
news-image

கடன் மறுசீரமைப்பு பேச்சுவார்த்தை : உடன்பாட்டுக்காக...

2024-04-17 18:52:41
news-image

17 வயது மகளை 5 வருடங்களாக...

2024-04-17 18:51:31
news-image

பலஸ்தீன சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு கொழும்பில்...

2024-04-17 18:42:21