வட­கொ­ரி­யாவின் தொடர் அணு ஆயுத சோத­னை­களால், அமெ­ரிக்­கா­விற்கும், வட­கொ­ரி­யா­விற்கும் மோதல் போக்கு நாளுக்கு நாள் அதி­க­ரித்து கொண்டு செல்­கி­றது.

அது­மட்­டு­மின்றி வட­கொ­ரியா ஒரு பலம் வாய்ந்த ஏவு­க­ணையை தயார்­ப­டுத்தி வரு­வ­தா­கவும், அது எப்­போது வேண்டும் என்­றாலும் சோதனை செய்­யப்­ப­டலாம் என, வட­கொ­ரியா சென்று திரும்­பிய ரஷ்ய எம்.பி. ஒருவர் தெரி­வித்­தி­ருந்தார்.

இதை­ய­டுத்து அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்ப், வட­கொ­ரி­யாவை முற்­றிலும் அழித்து விடுவேன், அந்த நாட்­டுடன் அமைதிப் பேச்சு நடத்­து­வ­தற்கு வாய்ப்­பில்லை. இரா­ணுவ நட­வ­டிக்கை மட்­டுமே ஒரே தீர்வு என்று டுவிட்­டரில் தெரி­வித்­தி­ருந்தார். 

இப்­படி இரு­நா­டு­க­ளுக்கும் மோதல் போக்கு நிலவி வரும் நிலையில், அமெ­ரிக்­காவின் ஆளும் கட்­சி­யான குடி­ய­ரசு கட்­சியின் மூத்த எம்.பி. பொப் கார்கர், அமெ­ரிக்க ஜனா­தி­பதி ட்ரம்ப் பயிற்சி ஜனா­தி­பதி போல் செயல்­ப­டு­கிறார். டுவிட்­டரில் சர்ச்­சைக்­கு­ரிய கருத்­து­களை குறிப்­பிட்டு வரு­கிறார்.

ட்ரம்பின் இந்த விதண்­டா­வாத கருத்துக்களால் மூன்றாம் உலகப்போர் நிகழ்வதற்கு சாத்தியக் கூறுகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.